அஜித்தின் டான்ஸ் மூவ்ஸ்.. எச்.வினோத் நெகிழ்ச்சி..

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எச்.வினோத் - அஜித்
எச்.வினோத் - அஜித்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

துணிவு

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் டான்ஸ் மூவ்ஸ் பற்றி இயக்குனர் எச். வினோத் கூறியதாவது, "துணிவு படத்தின் முதல் பாதியில் வரும் சில நடனங்கள் அஜித் சாரே ஆடியது. பெரிய ஆங்கில் எதுவும் பார்க்கவில்லை. கேமராவை வைத்து விட்டு நீங்க ஆடுங்க சார் என்று விட்டு விட்டோம். மைக்கேல் ஜாக்சன் மூன் வாக் 'moonwalk' நடனத்தை நானும் கல்யாண் சாரும் கேட்காமலே அஜித் சார் அவராகவே ஆசைப்பட்டு ஆடினார். அந்த கதைக்கு சரியாக தேவைப்பட்டது. அதை அஜித் சார் ஈசியாக செய்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com