கிங் அஜித்குமார்.. விக்னேஷ் சிவன் வைரல் பதிவு..

எச் வினோத் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ‘துணிவு’.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

விக்னேஷ் சிவன் பதிவு

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் 'துணிவு' திரைப்படத்தை பார்த்து ரசிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "திரையில் கிங்கை பார்ப்பது ரசிப்பது அலாதியானது. அனைத்து விதத்திலும் 'துணிவு' திரைப்படம் பிளாக் பஸ்டர். எச்.வினோத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com