படப்பிடிப்பை நிறைவு செய்த நானி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, தசரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
நானி
நானி
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தசரா

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

தசரா

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தசரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் நானி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com