உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை - இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தை இயக்கி வருகிறார்.இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
Published on

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

லோகேஷ் கனகராஜ்

ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, " ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் என் கருத்து" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com