என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆர்.ஜே. பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ரன் பேபி ரன் படத்தின் புதிய அப்டேட்
    X

    ஆர்.ஜே. பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ரன் பேபி ரன்' படத்தின் புதிய அப்டேட்

    • இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    ரன் பேபி ரன்


    இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் லவிதா எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×