ரசிகர்கள் கொண்டாட்டத்தில் 'வாரிசு'.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்..

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்த்து மகிழ்ந்தார்.
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
Published on

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக இன்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.

துணிவு - வாரிசு

இதையடுத்து சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் வாரிசு படத்தைப் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படம் குறித்து கூறியதாவது, "வாரிசு படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்தேன். இதன் பிறகு அப்டேட்கள் வரும்" எனக் கூறினார்.

லோகேஷ் கனகராஜ்

இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com