ரீ எண்ட்ரி கொடுத்த ஜி.பி.முத்து.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்..

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை எட்டியுள்ளது.தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6
Published on

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6

இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 94 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல், ஜி.பி.முத்து, சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6

உள்ளே வந்த ஜி.பி. முத்துவிடம்,"திரும்ப அனுப்பும்போது தான் போகணும்" என்கிறார் பிக்பாஸ். அதற்கு நீங்க போக சொன்னாலும் போக மாட்டேன். வெளியே அவ்வளவு பாடு பட்டுட்டேன் என ஜி.பி.முத்து கூறுகிறார். தொடர்ந்து கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, சாந்தி "எல்லோருக்கும் காபி போடட்டுமா?" என கேட்கிறார். இதற்கு ஜி.பி. முத்து காபி போடுங்க. உப்புமா பக்கம் போய்டாதீங்க என கலாய்க்கிறார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com