வாரிசு - துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்..

வாரிசு- துணிவு திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.
வாரிசு - துணிவு
வாரிசு - துணிவு
Published on

விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

வாரிசு - துணிவு

இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

துணிவு - வாரிசு

அதாவது, ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com