என் மலர்
சினிமா செய்திகள்

சமந்தா
கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை - நடிகை சமந்தா உருக்கம்
- நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம்.
- இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
சாகுந்தலம்
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை சமந்தா பேசியதாவது, "இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது.
சாகுந்தலம் டிரைலர் வெளியீட்டு விழா
வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் ஒன்று மாறாது. நான் சினிமாவை நேசிக்கிறேன், சினிமா என்னை மீண்டும் நேசிக்கிறது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை. இந்திய இலக்கிய வரலாற்றில், சகுந்தலாவின் கதை மறக்க முடியாத ஒன்றாகும். குணசேகர் சார் என்னை இந்தக் கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்தது என் அதிர்ஷ்டம். இது உண்மையிலேயே எனது பாக்கியம்" என கூறினார்.






