இது தான் சூர்யா படத்தின் டைட்டில்.. வெளியான தகவல்..

சிறுத்தை சிவா தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'சூர்யா 42'.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யா
சூர்யா
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42 படக்குழு

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

சூர்யா 42

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'சூர்யா 42' படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'வீர்' என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com