கார்த்தி பட தயாரிப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி பட இயக்குனர்

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கொலைகாரன்’. இவர் இயக்கிய ‘வதந்தி’ வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
கார்த்தி பட தயாரிப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி பட இயக்குனர்
Published on

கடந்த 2019 -ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருந்த திரைப்படம் 'கொலைகாரன்'. இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வதந்தி' வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வதந்தி

இந்நிலையில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தியின் 'சர்தார்' படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com