ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறை சேர்த்திருந்தது.இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜாக்குலின்
ஜாக்குலின்
Published on

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்தது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஜாக்குலின்
ஜாக்குலின்

ஜாக்குலின்

சுகேஷ் சந்திரசேகரின் மோசடி தெரிந்திருந்தும் ஜாக்குலின் அவரோடு பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகை ஜாக்குலின் விளக்கம் அளித்து வந்தார்.

கோப்புபடம்
கோப்புபடம்

இந்த 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக நடிகை ஜாக்குலின் கடந்த மாதம் 12-ந்தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நடிகை ஜாக்குலின் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com