என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிந்தன் குட்டி"

    • கேரளாவில் மலையாள திரையுலகில் அனந்து அனந்தபத்ரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கோவிந்தன் குட்டி.
    • கோவிந்தன்குட்டி மீது நேற்று மேலும் ஒரு இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து உள்ளார்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் அனந்து அனந்தபத்ரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கோவிந்தன் குட்டி. அதைதொடர்ந்து அசுர வித்து, ஹார்ட் பீட்ஸ், ஒன்வே டிக்கெட், ஸ்பிரிட் உள்பட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது கோவிந்தன் குட்டி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த மாதம் எர்ணாகுளம் வடக்கு போலீசில் எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடிகர் கோவிந்தன் குட்டி மீது பாலியல் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் நடிகர் கோவிந்தன் குட்டி தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் வடக்கு போலீசார் நடிகர் கோவிந்தன் குட்டி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

     

    கோவிந்தன் குட்டி

    கோவிந்தன் குட்டி

    இதற்கிடையே புகாரை வாபஸ் பெறக்கூறி கோவிந்தன் குட்டியும், மலையாள சினிமா உலகை சேர்ந்த சிலரும் தன்னை மிரட்டுவதாக அந்த இளம்பெண் கூறிவந்தார். இதற்கிடையே நடிகர் கோவிந்தன் குட்டி முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து அந்த இளம்பெண் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் நடிகர் கோவிந்தன்குட்டி மீது நேற்று மேலும் ஒரு இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக எர்ணாகுளம் வடக்கு போலீசார் கோவிந்தன் குட்டி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×