என் மலர்
சினிமா செய்திகள்

வீழ்ந்து வலிமையுடன் மீண்டும் எழுவோம்.. ரசிகருக்கு பதிலடி கொடுத் சமந்தா
- தமிழில் கடந்த மாதம் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் வெளியாகின.
- இதுகுறித்து சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகரின் பதிவிக்கு பதிலளித்துள்ளார்.
தமிழில் கடந்த மாதம் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட் ஆகிய பெண்களை முதன்மைபடுத்தும் கதாபாத்திரங்களை கொண்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன. தியேட்டர்களில் வைக்கப்பட்டு உள்ள இந்த படங்களின் பேனர்களை ஒருவர் புகைப்படும் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து, ''தமிழ் சினிமா முன்னேற்ற பாதையில் செல்கிறது. 10 வருடங்களுக்கு முன்னால் இதுபோன்று நினைத்து பார்க்க முடியாது'' என்ற பதிவையும் பகிர்ந்து இருந்தார்.
இந்த போஸ்டர்களை பார்த்த சமந்தா பெண்கள் எழுச்சி பெறுகிறார்கள் என்ற பதிவை பகிர்ந்து இருந்தார். அதற்கு ஒருவர், ''ஆமாம் பெண்கள் எழுவது விழுவதற்காகத்தான்'' என்று எதிர்மறையாக பதில் சொல்லி இருந்தார். அந்த ரசிகருக்கு சமந்தா பதிலடி கொடுக்கும் வகையில், ''விழுந்து மீண்டும் எழுவது மேலும் வலிமையாக்கும் நண்பரே'' என்று கூறியுள்ளார். இன்னொரு ரசிகர் பதிவுக்கு பதில் அளித்த சமந்தா, ''அனைவரின் பிரார்த்தனை எனக்கு மேலும் வலிமை தருகிறது'' என்றும் கூறியுள்ளார்.
????????
— Samantha (@Samanthaprabhu2) January 2, 2023
Women Rising!! https://t.co/qR3N3OozK8






