என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இதில் கலந்துக் கொள்வதற்காக இசையமையப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார்.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

     


    இந்நிகழ்வில் ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார். பலத்த பாதுகாப்புடன் தர்காவுக்கு சென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அங்கு சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

    • அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார்.
    • அஜித் தனது குடும்படத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர், நடிகைகள் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரும் மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் புத்தாண்டு கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்களை ஷாலினி வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இதில் மகள் அனோஷ்காவுடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

     

    அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அஜித்குமார் கதாபாத்திரம் வில்லத்தனமாக சித்தரித்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. அடுத்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

     

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

     

    இதனிடையே தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்... அதே ஆற்றல் முழு வீச்சில்.. முதல் நாளே தூள்.." என்று நடிகர் மனோபாலா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கினர்.

     

    மனோபாலா

    மனோபாலா

    இந்நிலையில் மனோபாலாவின் புதிய பதிவால் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், எனது ட்வீட்டை நீக்கிவிட்டேன்... என்னை மன்னியுங்கள்.. என்று குறிப்பிட்டுள்ளார். 

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    துணிவு

    இந்நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 'துணிவு' திரைப்படம் 2.25 மணி நேரம் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே -62 படத்தில் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    அஜித்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    விக்னேஷ் சிவ்ன் பதிவு

    இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், "எனது அடுத்த பெரிய வாய்ப்பான 'ஏகே 62' படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் பெரிய பொறுப்பினையளித்த அஜித், லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. சுவாரசியமான புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளேன். வாழ்க்கையில் சிறிய விஷயங்கள்தான் நம்மை மகிழ்ச்சியாக்குகிறது. அதில் கவனம் செலுத்தி மகிழ்ந்திருங்கள். பெரிய விஷயங்கள் தானாக வந்து விழுந்துவிடும்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.



    • பிக்பாஸ் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சி இன்றுடன் 85 நாட்களை நெருங்கியுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 83 நாட்களை நெருங்கியுள்ளது.



    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வார தலைவருக்கான போட்டியில் அசீம் மற்றும் ஏடிகே கலந்து கொள்கின்றனர். அப்போது அசீம் உங்களை விட எனக்கு கோபம் குறைவு என்று ஏடிகே கூறுகிறார். இதற்கு அசீம் கோபக்காரன்னு பெயர் வாங்குனா கூட எனக்கு பரவாயில்லை என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இந்நிலையில், தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்... அதே ஆற்றல் முழு வீச்சில்.. முதல் நாளே தூள்.." என்று நடிகர் மனோபாலா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • 'அவெஞ்சர்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் ஜெர்மி ரென்னர்.
    • இவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஹாலிவுட்டின் மார்வெல் படமான 'அவெஞ்சர்ஸ்' படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர் 2008-ம் ஆண்டு வெளியான 'தி ஹர்ட் லாக்கர்' படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான 'தி டவுன்' படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.


    ஜெர்மி ரென்னர்

    இந்நிலையில், ஜெர்மி ரென்னர் அமெரிக்காவின், நெவாடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டின் அருகில் இருந்த பனியை அகற்றும் போது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் படுகாயமடைந்த ரென்னரை விமானம் மூலம் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


    ஜெர்மி ரென்னர்

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், 'விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை சீராக உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்பட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் தோற்றம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்துள்ளார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து இந்நிகழ்ச்சி நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. இந்நிலையில், 'சுப்ரமணியபுரம்', 'நாணயம்', 'ஈசன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் தோற்றம் குறித்து விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.


    விஜய்

    தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.

    அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.

    இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன்.

    நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?


    விஜய்

    ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

    எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.


    ஜேம்ஸ் வசந்தன்

    நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.

    ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்!

    முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.



    • இயக்குனர் செல்வராகவன் புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
    • இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

     

    செல்வராகவன்

    செல்வராகவன்

    செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் செல்வராகவன் பதிவிட்டது, "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு" கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல" என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

     

    செல்வராகவன்

    செல்வராகவன்

    இந்நிலையில் செல்வராகன் தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் நம் மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும்! என்று குறிப்பிட்டு, அவர் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமாராக நடித்த தனுஷின், வலிக்கல கொஞ்சம் கூட வலிக்கல என்ற வசனத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. தொடர்ந்து செல்வராகவன் இதுபோன்ற பதிவுகளை பதிவிட்டு வருவதால் ரசிகர்கள், செல்வராகவனுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அனிமல்’.
    • இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக இணைந்துள்ளார்.

    'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக்கான  'கபீர் சிங்' கும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    அனிமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், 'அனிமல்'திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி மற்றும் கூர்மையான கோடரியுடன் ரன்பீர் கபூர் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

    'அனிமல்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் சமீபத்தில் படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    புஷ்பா படக்குழு

    புஷ்பா படக்குழு

    'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 01.12.2022 அன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

     

    புஷ்பா

    புஷ்பா

    இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வசூல் சாதனை நிகழ்த்திவருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ரஷ்யாவில் 25 நாட்களை கடந்து 774 திரைகளில் 10 மில்லியன் ரூபல்ஸ் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×