என் மலர்
சினிமா செய்திகள்
- சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

மாவீரன்
'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் இனையத்தில் வைரலாகி வருகிறது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'.
- இப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

துணிவு
'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

துணிவு
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'.
- இந்த படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வால்டேர் வீரய்யா
இந்நிலையில் இப்பட்த்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு, விரைவில் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'.
- இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வீர சிம்ஹா ரெட்டி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

வீர சிம்ஹா ரெட்டி
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ் மோகுடு என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வருகிற ஜனவரி 3-ஆம் தேதி மாலை 7.55 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கோமாளி' மற்றும் 'வெற்றிவேல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரவீனா.
- நடிகை பிரவீனா மற்றும் அவரது மகள் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
தமிழில் கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று', ஜெயம் ரவியுடன் 'கோமாளி' மற்றும் 'வெற்றிவேல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரவீனா. சில தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கும் இவர், மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கிறார். ஏற்கனவே பிரவீனாவை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசில் புகார் செய்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லியில் ஒருவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

பிரவீனா
இந்நிலையில் தற்போது பிரவீனா மற்றும் அவரது மகள் புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மகளுடன் சென்று சைபர் கிரைம் போலீசில் பிரவீனா புகார் அளித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது ஏற்கனவே நான் புகார் அளித்ததால் அவர் என்னை பழிவாங்கும் நோக்கோடு எனது புகைப்படம் மற்றும் மகள், அம்மா, சகோதரி ஆகியோரின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வருகிறார். எனது பெயரில் சுமார் 100 போலி கணக்குகள் தொடங்கி ஆபாச படங்களை வெளியிடுகிறார். இப்படி ஒரு வக்கிரபுத்தியோடு யாரும் இருக்க முடியாது'' என்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
- இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

துணிவு
'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

துணிவு
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் முதலிடைத்தை பிடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் ரசிகர்களுக்கு புத்தாண்டை வாழ்த்து தெரிவித்தார்.
- விஜயகாந்ததை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்து பகிர்ந்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் புத்தாண்டை முன்னிட்டு அவரின் கட்சி தலைமை அலுவலகத்தில் காத்திருந்தனர்.

விஜயகாந்த்
இந்நிலையில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். விஜயகாந்ததை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம்
இப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தை 3-டியில் மாற்ற உள்ளதாகவும், இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

சாகுந்தலம்
இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Starting this new year with an exciting announcement ?#Shaakuntalam update tomorrow at 11 AM ✨@Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @SVC_official @neeta_lulla @tipsofficial #EpicLoveStory #MythologyforMilennials pic.twitter.com/L2EE12M5Ol
— Sri Venkateswara Creations (@SVC_official) January 1, 2023
- உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
- நடிகர் ரஜினி தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்து பகிர்ந்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினியின் ரசிகர்கள் புத்தாண்டை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பு குவிந்து ரஜினியின் வாழ்த்துக்காக காத்திருந்தனர்.

ரசிகர்களை சந்தித்த ரஜினி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னையில் தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் 'சோல் ஆஃப் வாரிசு' (Soul of Varisu) பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு - விஜய்
'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
- இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

துணிவு
'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

துணிவு
இதையடுத்து 'துணிவு' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 83 நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் ஜனனியோட வாய்ப்ப பல வகையில் அமுதவாணன் பறித்து விட்டார். அடுத்தவர்கள் வாய்ப்பை பறித்ததற்காக அமுதவாணனுக்கு கொடுக்கிறேன் என்று அசீம் கூறுகிறார். இதற்கு அமுதவாணன் இல்ல அசீம் அது 100 சதவீதம் பொய் என்று வாதிடுகிறார். இதற்கு அசீம் குத்தம் உள்ள நெஞ்சம் தான் குருகுருக்கும். நான் இப்பவும் சொல்றேன் ஜனனி இந்த வீட்டு விட்டு போக காரணம் நீங்க தான். அவரை பயன்படுத்தி நீங்க பாதுகாப்பாய்டீங்க அவள வெளிய அனுப்பிட்டீங்க என்று உண்மையை உடைக்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. சமூக வலைதளத்தில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






