இணையத்தை கலக்கும் வால்டேர் வீரய்யா படத்தின் போஸ்டர்

சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இணையத்தை கலக்கும் வால்டேர் வீரய்யா படத்தின் போஸ்டர்
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா
வால்டேர் வீரய்யா

வால்டேர் வீரய்யா

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வால்டேர் வீரய்யா
வால்டேர் வீரய்யா

வால்டேர் வீரய்யா

இந்நிலையில் இப்பட்த்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு, விரைவில் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com