என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

    இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'. இதில் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் சாக்ஷி அகர்வால், ஸ்வயம்சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


    பொய் இன்றி அமையாது உலகு

    பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை பேட்டை' வசந்த் இசையமைத்திருக்கிறார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் இணைந்து தயாரித்திருக்கிறது.


    பொய் இன்றி அமையாது உலகு

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.


    பொய் இன்றி அமையாது உலகு

    'பொய் இன்றி அமையாது உலகு' திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, '' நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும்.


    பொய் இன்றி அமையாது உலகு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது. இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லவ் டுடே' படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக 'பொய் இன்றி அமையாது உலகு' தயாராகி இருக்கிறது'' என்று கூறினார்.




    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படல் ‘வாரிசு’.
    • இந்த படத்தின் சோல் ஆஃப் வாரிசு பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து சமீபத்தில் 'வாரிசு' திரைப்படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.


    வாரிசு

    இந்நிலையில், சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் செல்வராகவன் புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
    • இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


    செல்வராகவன்

    மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு " கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல " என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


    செல்வராகவன்

    இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இது போன்று பதிவுகளை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் கவலையை விடுங்கள் மகிழ்ச்சியான காலங்கள் திரும்ப வரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.




    • இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’.
    • இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.


    விடுதலை படக்குழு

    சமீபத்தில் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு.. என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.


    விடுதலை படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடுதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை சூரி தனது இணையப்பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.



    • இயக்குனர் என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பத்து தல

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர்.


    பத்து தல

    மேலும், நடிகர் கவுதம் கார்த்திக் 'பத்து தல' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    பத்து தல போஸ்டர்

    அதன்படி, 'பத்து தல' திரைப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • 'துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    துணிவு போஸ்டர்

    இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் இன்று (டிசம்பர் 31) மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • இயக்குனர் பாபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'.
    • இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


    வால்டேர் வீரய்யா

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டைட்டில் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    வால்டேர் வீரய்யா

    இந்நிலையில், 'வால்டேர் வீரய்யா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பூனக்காலு'பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • பிரதமர் மோடியில் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.


    நரேந்திர மோடி - ஹீராபென் மோடி

    இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்... அம்மா!" என்று பதிவிட்டுள்ளார்.



    • சுரேஷ் சாத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கொடுவா’.
    • இந்த படத்தில் கதாநாயகனாக நிதின் சத்யா நடித்துள்ளார்.

    வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நிதின் சத்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை -28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் 'கொடுவா' படத்தில் நடித்து வருகிறார்.


    கொடுவா படக்குழு

    'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கொடுவா' திரைப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.


    கொடுவா ஃபர்ஸ்ட் லுக்

    மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    • எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, 'துணிவு' திரைப்படத்தில் நடிகர் பிரேம், பிரேம் என்ற கதாபாத்திரத்திலும் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் , மைபா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.


    துணிவு போஸ்டர்

    இந்நிலையில், ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பக்ஸும் கிரிஷ் என்ற கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேனும் நடித்துள்ளதாக போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வெளியாகும் அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'.
    • இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.


    ஓ மை கோஸ்ட்

    இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.


    ஓ மை கோஸ்ட்

    இந்நிலையில், 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முடித்துவிட்டு வெளியில் வந்த நடிகை தர்ஷா குப்தா, நான் அப்படி என்ன செய்தேன். அவர் என்னை ஏன் அப்படி ப்ரொஜெக்ட் செய்கிறார் என்று தேம்பி தேம்பி அழுதார்.


    தர்ஷா குப்தா

    இது குறித்து தர்ஷா குப்தா கூறியதாவது, "நான் நடந்து வந்த போது என்னுடைய ஆடையை யாரோ மிதித்து விட்டார் என்று நான் திரும்பி பார்த்ததை என்னுடைய அசிஸ்டண்டை நான் திட்டியதாகவும் நான் திமிர் பிடித்தவள் என்பது போலவும் போட்டிருந்தார்கள். ஆனால் அது என் தம்பி தான் அவனுக்கு தெரியும் நான் அவனிடம் எப்படி பழகுகிறேன் என்று இது தெரியாமல் பேசுவது வருத்தமாக உள்ளது" என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கியுள்ள செம்பி திரைப்படத்தில் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடித்திருக்கின்றனர்.


    செம்பி

    ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். 'செம்பி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'செம்பி' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "செம்பி! செல்ஃபி எடுத்து தன்னைத்தானே ரசித்துக் கொள்வதைப் போல,'செம்பி' முழுக்க பிரபு சாலமன் அவர்களின் பேராண்மையை ரசித்தேன்.


    செம்பி

    பெரும் தைரியத்துடன் கதைக்கருவை மட்டுமே நம்பி கோவை சரளா அவர்களையும், ஒரு சிறு பெண்ணையும் மையமாக்கி அதையே மைனாவாக்கி அதேயளவு அழகுணர்ச்சியும், அதிரடி கனெக்ட் செய்யும் கதைக்களமும் ஒரு குற்றத்திற்கு உரிய தீர்ப்பையும் இப்படிக் கூட செயல்படுத்த முடியும் என பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார். ஒளிப்பதிவும் இசைநுட்பமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு சமமாக் வென்றிருக்கிறது. இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.



    ×