என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிரதமர் மோடியில் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.


    நரேந்திர மோடி - ஹீராபென் மோடி

    இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்.



    • நடிகர் சிரஞ்சீவி தற்போது 'வால்டேர் வீரய்யா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் 'வால்டேர் வீரய்யா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.


    சிரஞ்சீவி

    ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "கஷ்டப்பட்டுத்தான் நடிக்க வேண்டும். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் அந்த படத்துக்கு 100 சதவீதம் நியாயம் செய்ய வேண்டும். கஷ்டத்தை பார்த்து வருந்தக்கூடாது.


    சிரஞ்சீவி

    கொடுத்த காட்சியில் நடித்தே ஆக வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சினிமாவில் இருக்க அருகதை உண்டு. நடிப்பில் புகழ், பெயர் சும்மா வராது. கஷ்டப்பட வேண்டும். கதாபாத்திரங்களுக்காக நடிகர்கள் பசியோடு இருக்க வேண்டும். நடிப்பு பசி செத்து விட்டால் சினிமாவை விட்டே போய் விடவேண்டும். நான் கஷ்டமான காட்சிகளிலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மாடுபோல் உழைப்பேன். திரையில் என்னை பார்க்கும் ரசிகர்கள் கைதட்டலில் கஷ்டப்பட்டது மறைந்துவிடும்'' என்று கூறினார்.

    • இயக்குனர் பா.இரஞ்சித் தற்போது 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இவர் நடத்தும் 'மார்கழியின் மக்களிசை' நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக 'மார்கழியின் மக்களிசை' எனும் இசை விழாவை நடத்தி வருகிறார்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். இதில், பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் கூறியதாவது, "இளைய ராஜா எனக்கு உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போன்று தான் இளையராஜா எனக்கு. அவது பாடல்களை கேட்கும் பொழுது மிகவும் எமோஷனலாக இருக்கும்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    அது போன்று தான் நான் யுவன் ஷங்கர் ராஜாவை பார்க்கிறேன். இவரது இசை பல நேரங்களில் என்னை ஊக்குவித்துள்ளது. என்னோட வலியை இசையோடு கலந்து அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். இந்த மேடையில் யுவன் ஷங்கர் ராஜா வந்து நிற்பது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.

    • மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியிருந்தார்.
    • இவருக்கு ஆதரவு தெரிவித்து சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார்.


    சித்தார்த் பதிவு

    அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இவருக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், "மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார்.


    சித்தார்த்

    இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
    • இந்த படத்திலிருந்து வெளியான முதல் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.


    பதான்

    இந்நிலையில் 'பதான்'படத்தில் சில மாற்றங்களை செய்ய தணிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. அதாவது, சர்ச்சைக்குரிய பாடல்கள் உட்பட சில மாற்றங்களை செய்து மீண்டும் சான்றிதழுக்கு சமர்ப்பிக்குமாறு தணிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக 'மார்கழியின் மக்களிசை' எனும் இசை விழாவை நடத்தி வருகிறார்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விரைவில் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விரைவில் பா.இரஞ்சித் - யுவன் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யுவன் ஷங்கர் ராஜா தற்போது 'ஏழு கடல் ஏழு மலை', 'கஸ்டடி' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கஸ்டடி போஸ்டர்

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'கஸ்டடி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுபமா.
    • இவர் நடிப்பில் சமீபத்தில் ’18 பேஜஸ்’ திரைப்படம் வெளியானது.

    2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


    அனுபமா பரமேஸ்வரன்

    சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான '18 பேஜஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை அனுபமா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.


    அனுபமா பரமேஸ்வரன்

    அதாவது, ரூ.60 லட்சம் சம்பளமாக வாங்கிய அனுபமா படங்களின் தொடர் வெற்றியால் ரூ.1 கோடியே 20 லட்சம் கேட்பதாகவும் இந்த தொகையை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாமனிதன்’.
    • இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


    மாமனிதன்

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


    மாமனிதன்

    இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகி, சிறந்த எடிட்டர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த சாதனையாளர் என நான்கு விருதுகளை வென்றுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

    மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.


    பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்

    இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • நடிகை ராஷ்மிகா தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் ’மிஷன் மஜ்னு’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ராஷ்மிகா

    ராஷ்மிகா பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்த 'குட்பை'திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து 'மிஷன் மஜ்னு'திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    ராஷ்மிகா

    அவர் கூறியதாவது, "தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங்ஸ், ஐட்டம் பாடல்கள் போன்ற டான்ஸ் மோடில் தான் பாடல்கள் வருகின்றன. பாலிவுட்டில் தான் மெலோடியான ரொமாண்டிக் பாடல்கள் வருகின்றன. மிஷன் மஜ்னு படத்தில் அப்படி நான் எதிர்பார்த்த ரொமாண்டிக் பாடல் உள்ளது. அதனை கேட்க நான் ஆவலாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.


    ராஷ்மிகா

    இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுவதாகவும், கொஞ்சம் கூட பொறுப்புணர்வே இல்லையென்றும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட திரையுலகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா, இப்போது ஆந்திர மந்திரியாக பதவி வகிக்கிறார்.
    • சமூக வலைத்தளத்தில் பரப்பும் அவதூறு கருத்துக்கள் வேதனை அளிப்பதாக ரோஜா தெரிவித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா, இப்போது ஆந்திர மந்திரியாக பதவி வகிக்கிறார். இந்த நிலையில் அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறிவைக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ரோஜா அளித்துள்ள பேட்டியில். "நான் சினிமாவிலும், அரசியலிலும் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வரும் அவதூறுகள் வேதனை அளிக்கிறது.

     

    ரோஜா

    ரோஜா

    பிறந்தநாளில் எனது சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினர். இப்போது என் மகளின் போட்டோவை மார்பிங் செய்தும், என்னை பற்றியும் ஆபாசமான படங்களை வெளியிடுகிறார்கள். அதை பார்த்த என் மகள் மிகவும் வருத்தப்பட்டாள். இவையெல்லாம் நமக்கு தேவையா என்று என் முகத்தின் மீது நேரடியாக கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பிரபலங்களுக்கு இவை எல்லாம் சாதாரணமாக நடப்பவைதான். இவற்றை கண்டு கொண்டால் முன்னேற முடியாது என்று என் குழந்தைகளுக்கு நானே புரியும்படி சொல்லி வருகிறேன்'' என்றார்.

    ×