என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.
    • இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

    1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

     

    பார்த்திபன்

    பார்த்திபன்

    இந்நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதுகளை குவித்த ஆடுகளம் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும் அதை பார்த்திபன் மறுத்தாகவும் பதிவிட்டுள்ளார். அதில், Beginning of this day "hi" ! Beginning' ஜகன் விஜயா படை-படைப்பாக்கத்தில் நண்பர் லிங்குசாமியின் தம்பிசாமி போஸ் வெளியிடும் split frame-ல் இரு காட்சிகளை காட்டி, இருக்கையில் இருப்புக் கொள்ளா தவிப்பை உண்டாக்கி, முடிவில் இரு கை ஓசையெழுப்பச் செய்கிறார். சினிமா விரும்பிகள் ஒவ்வொருவரும் இரு டிக்கட் வாங்கிப் பார்க்கலாம். இயக்குனருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். அடுத்ததில் இன்னும் நேர்த்தி கூட்டுவார்!


    பார்த்திபன்

    பார்த்திபன்

     

    ஒரு flash back ஆடுகளம்' படத்தில் நடிக்க திரு.வெற்றிமாறன் வந்து அழைப்பு விடுக்க நான் மறுப்பை விடுக்க காரணம்… நான் திரு.தனுஷிடம் beginning தினுசான கதை ஒன்றை கூறியிருந்தேன் இருவரும் இணைந்து நடிக்க! ஒரு frame-ல் இரு கதைகள் complicated ஆக இருக்குமென்று மென்று முழுங்கி பின் ஓங்கி முழங்கி சொல்லப்பட்டது. ஆக!!!!! "ஆகா miss பண்ணிட்டமே" எனத் தோன்றினாலும் இன்றைய இளம் இயக்குனர்கள் புதிய புதிய யுத்திகளுடன் வருவதால் நாமும் புத்தியை இன்னும் கூர்மை கத்தியாக்கி கோதாவில் இறங்க உத்வேகம் வருகிறது.


    பார்த்திபன்

    பார்த்திபன்

     

    From the Beginning தின்றதை மறந்து பசி எடுப்பதைப் போல, வென்றதை மறந்து மேலும் வெல்ல முயல்வோம். இன்றிரவு 'செம்பி' பார்த்து மீண்டும் எழுதுகிறேன். விமர்சனமாக அல்ல- வருமானத்திற்காக… நாளைய சினிமாவில் வருமானம் ஈட்ட வெறும் கதைவுட முடியாது. சொல்லும் முறைகள் மூலமே இளம் பார்வையாளர்களை வெல்ல முடியும்! வயது & அனுபவம் பழையது. பழையன மறந்து பயில்வோம் சுடச்சுட ச்!. என்று பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் பாரதிராஜா தற்போது தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடித்து வந்தார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் பாரதிராஜா இணைந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் "கருமேகங்கள் கலைகின்றன" படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதனிடையே இயக்குனர் பாரதிராஜாக்கு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இந்த படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் பாரதிராஜா கலந்து கொண்டார்.

    இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது, பிரமாண்டம் என்பது கனவு காண்பது. ஆனால், இப்படம் யதார்த்தமான வாழ்க்கையை கூறும் படம். கனவில் நீங்கள் இந்திரலோகம் வரை சென்று வரலாம். வாழ்க்கையில் அப்படி முடியாது. தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி என்பது உங்களுக்கே தெரியும். 30 வருடங்களுக்கு முன்பு இவனுடைய கவிதை தொகுப்பை நான் வெளியிட்டு இருக்கிறேன். அந்த புத்தகத்தைப் படித்ததும் இவனுக்குள் இப்படி ஒரு எழுத்தாளனா என்று ஆச்சரியப்பட்டேன்.

    எழுதுவது என்பது வேறு, சினிமா எடுப்பது என்பது வேறு. ஆனால், இரண்டையும் சிறப்பாக செய்திருக்கிறான். இப்படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியாக நடித்திருக்கிறேன். எனக்கு மகனாக இயக்குனர் கௌதம் மேனனும், மகளாக அதிதியும் நடித்திருக்கிறார்கள். இப்படம் மார்ச் மாதம் வெளியாகிறது. பத்திரிகையாளர்கள் அனைவரும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் 'சோல் ஆஃப் வாரிசு' (Soul of Varisu) பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    சோல் ஆஃப் வாரிசு

    சோல் ஆஃப் வாரிசு

    'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

     

    சோல் ஆஃப் வாரிசு

    சோல் ஆஃப் வாரிசு

    வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பில்போர்ட்டின் ஹாட் டிரெண்டிங் சாங்க்ஸ் வழங்கும் டுவிட்டர் சார்ட்டில் சோல் ஆஃப் வாரிசு பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் தளபதி 67.
    • இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணையவுள்ளது உறுதியாகியுள்ளது.

    இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். ரசிகர்களால் 'தளபதி 67' என அழைக்கப்படும் இந்த படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

     

    மாஸ்டர்

    மாஸ்டர்

    கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

     

    கவுதம் வாசுதேவ் மேனன் - விஜய்

    கவுதம் வாசுதேவ் மேனன் - விஜய்

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் கவுதம் வாசுதேவ் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.


    நரேந்திர மோடி -ஹீராபென்

    இதற்கிடையே, குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து இயக்குனர் சீனுராம்சாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு. பாசத்தில் நிகரற்றது. எந்நேரமும் தாயின் கவலை பிள்ளையின் உணவு பற்றியது தான். மாண்புமிகு பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்.



    • அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் பார்டர்.
    • இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார்.

    இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.


    பார்டர் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இப்படம் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியாகவில்லை. இந்நிலையில், 'பார்டர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.



    • நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்திற்கு சூர்யா 42 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார்.


    சூர்யா 42 படக்குழு

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 2023-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.
    • சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார்.


    சித்தார்த் பதிவு

    அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


    சு. வெங்கடேசன்

    சித்தார்த்தின் இந்த பதிவு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் பதிவிற்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், "மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான்.
    • சல்மான் கான் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

    இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான். இவர் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் கடந்து விட்டன. இவர் நேற்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


    சல்மான்கானை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்

    இதையடுத்து நடிகர் சல்மான் கானை பார்க்க மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள். வீட்டின் பால்கனியில் தனது தந்தை சலீம் கானுடன் வந்த சல்மான் கான் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது, ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னே செல்ல முயன்றனர். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


    பதான்

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    'பதான்' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.


    பொன்னியின் செல்வன்

    இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். அதன்படி, 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • விஷ்ணு விஷால் நடிப்பில் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’.
    • இப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.


    கட்டா குஸ்தி

    இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கட்டா குஸ்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×