என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ’தேன்’, ‘ஜெயி’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி.
    • இவர் தற்போது ‘உடன்பால்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து 'தேன்', 'ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் 'உடன்பால்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.


    அபர்ணதி

    நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'உடன்பால்' திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை அபர்ணதி, தனக்கு அதிக ஸ்கிரீன் ஸ்பேஸ் கதைகளில் நடிக்க ஆசை அதற்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாக கூறினார்./


    உடன்பால்

    மேலும், ஆர்யாவுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை என்றார். பின்னர் பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'வாரிசு', 'துணிவு' திரைப்படத்தில் முதலில் 'துணிவு' திரைப்படத்தை பார்ப்பேன் என்றும் எனக்கு அஜித் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.

    • டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் அடுத்த ஒரிஜினல் வெளியீடான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் பிரிவில் ‘ஆர் யா பார்’ இணையத்தொடர் உருவாகியுள்ளது.
    • இத்தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் அடுத்த ஒரிஜினல் வெளியீடான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் பிரிவில் 'ஆர் யா பார்' தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்டுள்ளது. ஒரு சாதாரண மனிதன் பின்தங்கிய நிலையில் உள்ள தன் பழங்குடியினரைக் காப்பாற்றி நவீன உலகில் வாழ முயலும் கதையாக இந்த தொடர் உருவாகியுள்ளது. ஆக்‌ஷன்- கலந்த இந்த டிராமா தொடரை எட்ஜ்ஸ்டார்ம் வென்ச்சர்ஸ் எல்எல்பி சார்பில் ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரித்துள்ளனர். க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடர் டிசம்பர் 30, 2022 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    இதில் சர்ஜு கதாப்பாத்திரத்தில் ஆதித்யா ராவல் நடித்துள்ளார். இந்த அதிரடி ஆக்சன் டிராமா தொடரை ஆதித்யா ராவல், பத்ரலேகா, சுமீத் வியாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, திப்யேந்து பட்டாச்சார்யா, ஆசிப் ஷேக், ஷில்பா சுக்லா, வருண் பகத், நகுல் சேதேவ் மற்றும் பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

    இத்தொடரின் நடிகர் ஆதித்யா ராவல் கூறுகையில், சர்ஜு எனும் அழகான பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். சர்ஜு தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க விரும்புகிறார், மேலும் தனது இலக்கை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். ஒன்றின் பின் ஒன்றாக பல சவால்களை சமாளிக்கும் போது இக்கதாபாத்திரத்தின் வெவ்வேறு சாயல்களை நீங்கள் காணலாம். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான "ஆர் யா பார்" தொடரில் சர்ஜுவாக நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சித்தார்த் சென்குப்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு நன்றி என்றார்.

    • முன்னணி நடிகரான கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன்.
    • அக்‌ஷரா ஹாசன் பாலிவுட்டின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் .

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். பாலிவுட்டின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அக்‌ஷரா ஹாசன், அஜித்தின் 'விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார்.


    அக்‌ஷரா ஹாசன்

    இதைத்தொடர்ந்து, இவர் நடித்த 'கடாரம் கொண்டான்', 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார். அதாவது, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன், அக்‌ஷராவுக்கு ஆப்பிள் ஹெட்ஃபோன் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த வீடியோவை அக்‌ஷரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    தீ தளபதி - வாரிசு

    தீ தளபதி - வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. சில தினங்களுக்கு முன்பு மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.

     

    தீ தளபதி - வாரிசு

    தீ தளபதி - வாரிசு

    வாரிசு படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள தீ தளபதி பாடல் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்போது பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 80 நாட்களை நெருங்கியுள்ளது.

     

    ஐஷ்வர்யா ராஜேஷ்

    ஐஷ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில் இந்த வார பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் ரிலீஸ் (Freez, Release) டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பிறகு போட்டியாளர்களின் குடும்பங்கள் நுழைகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களின் குடும்பங்களை பார்த்த சந்தோஷத்தில் பிக்பாஸ் வீடு ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளது. இன்று வெளியாகியுள்ள புரொமோவில் மணிகண்டனின் மனைவி, குழந்தை, அம்மா மற்றும் சகோதரி ஐஷ்வர்யா ராஜேஷ் சென்றுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான ஐஷ்வர்யா ராஜேஷ் சென்றுள்ளது அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புரொமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சித்தார்த்.
    • மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார்.


     

    அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    • பிரபல தொலைக்காட்சி நடிகையான துனிஷா சர்மா, கடந்த 24-ந்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • நடிகை துனிஷாவின் இறுதி சடங்கு தொடங்கிய சில நிமிடங்களில் அவரது தாயார் துக்கத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

    பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான துனிஷா சர்மா, கடந்த 24-ந்தேதி அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டபோது, திடீரென தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில், போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

     

    துனிஷா

    துனிஷா

    காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகை துனிஷாவை தற்கொலைக்கு தூண்டினார் என்று அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சக நடிகரான ஷீஜன் கான் என்பவரை வாலிவ் நகர போலீசார் கைது செய்து, கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

     

    துனிஷா - ஷீசன் கான்

    துனிஷா - ஷீசன் கான்

    துனிஷா மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து, 15 நாட்கள் பிரிவுக்கு பின்னர் துனிஷாவை மரணத்திக்கு தூண்டிய விசயம் என்ன?, இருவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது பற்றி அறிவதற்காக இருவரின் மொபைல் போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வழக்குடன் தொடர்புடைய 17 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

     

    துனிஷா - ஷீசன் கான்

    துனிஷா - ஷீசன் கான்

    இந்நிலையில், நடிகை துனிஷாவின் இறுதி சடங்கு மீரா சாலையில் உள்ள தகன மேடையில் நடைபெற்றது. இதற்காக அவரது உடல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. நடிகை துனிஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது நண்பர்கள் மற்றும் திரை துறையினர் வந்தனர். நடிகை துனிஷா இறுதி சடங்கில் ஷீஜன் கானின் சகோதரிகளான சபாக் நாஜ், பலாக் நாஜ் மற்றும் தாயார் கலந்து கொண்டனர். அப்போது, கானின் சகோதரி பலாக் நாஜ் கதறி அழுதுள்ளார். ஷீஜன் கானின் தாயாரும் கண் கலங்கியபடி காணப்பட்டார்.

    • 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார்.
    • பாலாஜி மோகன்-நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் தகவல் பரவியது.

    'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த 'வாயை மூடி பேசவும்', தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'மாரி', தனுஷ்-சாய் பல்லவியின் நடிப்பில் மாரி 2 ஆகியப் படங்களை இயக்கினார். அதோடு மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' படத்தையும் தயாரித்தார்.

     

    பாலாஜி மோகன் 

    பாலாஜி மோகன் 

     

    2012-ல் தனது முதல் படத்தை இயக்கும் போது அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்தத் திருமணம் பின்னர் விவாகரத்தில் முடிந்தது. இதற்கிடையே, தெலுங்கு தொலைக்காட்சி நடிகை கல்பிகா கணேஷ், பாலாஜி மோகன்-நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் தெரிவித்தார். அதோடு அவர் தனது மனைவியை கட்டுப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டியிருந்தார்.

     

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் 

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் 

    இந்நிலையில் தற்போது பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ள எனக்கும், '7 ஆம் அறிவு', 'ராஜா ராணி' ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணாவுக்கும் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் நடந்தது. வெப் தொடர்களில் நடித்து வரும் தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ், எங்களின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அதை அவர் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். அதோடு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் 

    பாலாஜி மோகன் - தன்யா பாலகிருஷ்ணன் 

    இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதாடினார். பின்னர் டைரக்டர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த கல்பிகா கணேஷுக்கு நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு ஜனவரி 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.
    • இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

    1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.


    பார்த்திபன்

    இந்நிலையில், நடிகர் அஜித் குறித்து பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "வேள்பாரி யாரோ? வாள்பாரி நானே! ஆயிரத்தில் ஒருவனும்,பொன்னியின் செல்வனும் எனக்கொரு ராஜகம்பீரத்தை தந்திருப்பதும், 'சுழல்' சூழ் வரவேற்பும், 'இரவின் நிழல்' இளைய இதயங்களை லயமாக என் வயப்படுத்நியிருப்பதும் நுங்கும் நுரையுமாய் பொங்கி வழியும் நிறைவே!


    பார்த்திபன்

    குண்டு'ம் குழியுமாய் இருந்த என் பாதைகள் செப்பனிடப்பட்டு(dieting +workouts)புதிய பாதைக்கு மீண்டும் தயாராகி வருகிறேன் வயதென்பதென்ன? வெட்டவெளிதனில் நட்ட கருங்கல்லா நகராமல் நின்றுவிட!கடிகார முட்கள் jagging செல்லும் போது எதிர்திசையில் நகர்ந்துக் கொண்டிருக்கும் இலையுதிர் மரங்களே இருந்தால் சீவி சிங்காரித்துக் கொள்வதும்,கொட்டிவிட்டால் மயிரே போச்சி"என 'Chilla chilla'பாடியே (நரையைக்கூட மைப்பூசி மறைக்காமல் திரை கிழியும் விசிலுடன் அஜீத்தி) துணிவுடன் நாளை எதிர்கொள்வதுமே வாழ்வின் இன்பம் பொங்கல்! புதிய சொல் பொருள் அஜீத்தி = அசத்தி" என்று பதிவிட்டுள்ளார்.



    • வம்சி இயக்கத்தில் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ராஷ்மிகா

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முடித்து விட்டு ராஷ்மிகா தன் காரில் புறப்பட்ட போது அவரை சில ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தனர். ரசிகர்களைப் பார்த்த ராஷ்மிகா காரை நிறுத்தச் சொல்லி, "ஹெல்மெட் போட்டுக்கோங்க..." என அறிவுரைச் கூறிவிட்டு கிளம்பினார்.

    இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ராஷ்மிகா தங்கள் இதயத்தை வென்றதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் நடைபெற்றிருந்தது. இதில், சந்திரசேகர் மற்றும் ஷோபா கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் விஜய்யின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "எல்லாரும் நல்ல இருக்கணும்'னு வேண்டிக்கத்தான் இங்கு வந்தேன். விஜய் படம் நல்ல ஓடனும்னு எல்லாரும் வேண்டிக்கங்க" என்று கூறினார்.


    ஷோபா சந்திரசேகர்

    மேலும் விஜய்யின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "விஜய் எந்தப் படத்தில் எப்படி நடிக்கிறார் என்றே எனக்கு தெரியாது. 'வாரிசு' படத்தில் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றே எனக்கு தெரியாது. இந்த படம் ஃபேமிலி சப்ஜெக்ட் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். அவரின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது" என்று கூறினார்.

    • இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் தற்போது ‘பகாசூரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
    • செல்வராகவன் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


    செல்வராகவன்

    மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்" என தத்துவமாக பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



    ×