30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தீ தளபதி பாடல்

விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இப்படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.
தீ தளபதி - வாரிசு
தீ தளபதி - வாரிசு
Published on

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தீ தளபதி - வாரிசு
தீ தளபதி - வாரிசு

தீ தளபதி - வாரிசு

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. சில தினங்களுக்கு முன்பு மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.

தீ தளபதி - வாரிசு
தீ தளபதி - வாரிசு

தீ தளபதி - வாரிசு

வாரிசு படத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள தீ தளபதி பாடல் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com