என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மோகன்லால் தற்போது ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதன் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    மலையாளத்தில் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் 'மான்ஸ்டர்' திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    லிஜோ ஜோஸ் - மோகன் லால்

    இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    2009-ஆம் ஆண்டு 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தில் நடிகர் மோகன்லால், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

    மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.


    பொன்னியின் செல்வன் போஸ்டர்

    இந்நிலையில், 'அடிவானத்தில் ஏதோ விசேஷம் இருக்கிறது. என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா..? 'பொன்னியின் செல்வன்' படத்தின் புதிய அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



    • யோகி பாபு தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்.
    • இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    இந்நிலையில், நடிகர் யோகி பாபு குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.


    அதில், "வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும், வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த விழாவில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • சிரஞ்சீவி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’.
    • இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


    வால்டேர் வீரய்யா போஸ்டர்

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டைட்டில் பாடல் நேற்று வெளியானது. இந்நிலையில், இந்த பாடல் வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • 'துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் 'துணிவு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


    துணிவு

    இதைத்தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் 'துணிவு' படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. மேலும், இப்படத்தின் புதிய அப்டேட் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


    தென்காசி சாலையில் அஜித்

    இந்நிலையில், நடிகர் அஜித் தென் தமிழகத்தின், தென்காசி மாவட்டத்திற்கு தனது மோட்டார் பைக்கில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தென்காசி அருகே உள்ள திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அஜித் தனது மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். இதை பார்த்த இளைஞர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.


    சூரரைப் போற்று

    2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.


    சுதா கொங்கரா - ஜி.வி.பிரகாஷ்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இயக்குனர் சுதா கொங்கராவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • சில தினங்களுக்கு முன்பு அவதார்: தி வே ஆப் வாட்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

     

    அவதார்: தி வே ஆப் வாட்டர்

    அவதார்: தி வே ஆப் வாட்டர்

    13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த 16 ந்தேதி வெளியானது. அவதார்: தி வே ஆப் வாட்டர், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமான அவதாரின் தொடர்ச்சியாகும்.

     

    அவதார்: தி வே ஆப் வாட்டர்

    அவதார்: தி வே ஆப் வாட்டர்

    அவதார் 2 இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய மதிப்பில் ரூ 7 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் 10 நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியது. வரும் நாட்களில் நாட்டில் ரூ.500 கோடியை எதிர்பார்க்கப்படுகிறது. அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்போது பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 79 நாட்களை நெருங்கியுள்ளது.

     

    இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பங்கள் நுழைகின்றனர். அதில், இந்த வார டாஸ்க், ஃப்ரீஸ் ரிலீஸ் (Freez, Release) கொடுக்கப்படுகிறது. பிறகு போட்டியாளர்களின் குடும்பங்கள் நுழைகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களின் குடும்பங்களை பார்த்த சந்தோஷத்தில் பிக்பாஸ் வீடு ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த புரொமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்’.
    • இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதூன் படம் தற்போது தமிழில் 'ரீமேக்' செய்யப்பட்டுள்ளது.

    'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

     

    மெரி கிறிஸ்துமஸ்

    'மெரி கிறிஸ்துமஸ்'

    இந்த நிலையில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'.
    • விமானத்தில் இருந்து குதித்து துணிவு பட பேனரை பறக்கவிடும் வீரர்களின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

    துணிவு - விஜய்

    துணிவு - விஜய்

     

    'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் துணிவு படத்தின் 3-வது பாடலான 'கேங்ஸ்டா' வெளியானது.

     

    வானில் பறந்த துணிவு பேனர் 

    வானில் பறந்த துணிவு பேனர் 

    இந்நிலையில் துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது துணிவு பட விளம்பர பேனரை விமானத்தில் இருந்து குதித்து பறக்கவிட்ட நிகழ்வு துபாயில் நடத்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை படக்குழு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் அஜித் வழியில்... (Going A.K. way) 31 டிசம்பர் 22 அன்று ஒரு அற்புதமான புதிய அறிவிபுடன் வருகிறோம்! என பதிவிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்போது பிக்பாஸ் வீட்டில் ஒன்பது போட்டியாளர்கள் உள்ளனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 78 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், இந்த வாரம் நாமினேஷனுக்கு நபர்களை தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு அசீம் இந்த வீட்டில் பெரிதாக எதும் செய்தது போல் எனக்கு தெரியவில்லை என்று சிவினை நாமினேட் செய்கிறார். பதிலுக்கு சிவின் எந்த திருத்தமும் நடக்காத மாதிரி நான் உணர்கிறேன் என்று அசீமை நாமினேட் செய்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • பிரபல நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றன.

    பிரபல இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

    இதையடுத்து மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.


    சுஷாந்த் சிங் ராஜ்புட்

    இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதுகுறித்து ரூப்குமார் கூறுகையில், "சுஷாந்த் சிங் மறைந்த அன்று எங்களது கூப்பர் மருத்துவமனைக்கு 5 சடலங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். நாங்கள் அங்கே போய் பார்த்தபோதுதான் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் என்பது தெரியவந்தது.


    சுஷாந்த் சிங் ராஜ்புட்

    அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன, உடற்கூராய்வு செய்வதை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கச் சொன்னார்கள். அதனால் நாங்களும் அப்படியே செய்தோம்.

    சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சீனியர்களிடம் கூறினேன். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் உடலை போலீசாரிடம் ஒப்படைத்தோம்" என அவர் கூறியுள்ளார்.

    ×