பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்?

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்’.இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி - கத்ரினா கைப்
விஜய் சேதுபதி - கத்ரினா கைப்
Published on

விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதூன் படம் தற்போது தமிழில் 'ரீமேக்' செய்யப்பட்டுள்ளது.

'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

மெரி கிறிஸ்துமஸ்
மெரி கிறிஸ்துமஸ்

'மெரி கிறிஸ்துமஸ்'

இந்த நிலையில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com