என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகை துனிஷா சர்மா தளத்தில் நேற்று முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஷீசன் கான் வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று துனிஷாவை வற்புறுத்தியதாக அவரது தாயார் கூறியுள்ளார்.
இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் துனிஷா சர்மா. இவர் தன்னுடன் நடித்த நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் துனிஷாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் ஷீசன் கான் மறுத்ததாக தெரிகிறது. இதனால் கவலையில் இருந்த நடிகை துனிஷா சர்மா மும்பை அருகே படப்பிடிப்பு தளத்தில் நேற்று முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துனிஷா சர்மா
நடிகை துனிஷா சாவுக்கு காதலன் ஷீசன் கான் தான் காரணம் என்று புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் ஷீசன் கான் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டிய தாக வழக்குப்பதிவு செய்யப் பட்டது. நீதிபதி முன்பு நிறுத்தப்பட்ட நடிகர் ஷீசன் கானை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இன்று காலை அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

துனிஷா சர்மா
நடிகை துனிஷா சர்மா சாவுக்கு நான் காரணம் அல்ல. ஏற்கனவே அவர் பலதடவை தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறார். தற்போது தற்கொலை செய்து என்மீது பழி போட்டுள்ளார். எனக்கும் அவரது மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்தார். என்றாலும் நடிகர் ஷீசன் கானிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் 2 தினங்கள் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துனிஷா சர்மா - ஷீசன் கான்
இதற்கிடையே நடிகை துனிஷாவின் தாயார் பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, "எனது மகள் துனிஷா நடிப்பு மட்டுமே இலக்காக கொண்டிருந்தாள். திரை உலகில் புகழ்பெற வேண்டும் என்பது அவளது ஆசை ஆகும். ஆனால் உடன் நடித்த ஷீசன் கான் கடந்த 4 மாதங்களாக எனது மகளை மிரட்டி வந்தான். வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். ஒரு கட்டத்தில் எனது மகள் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.

துனிஷா சர்மா
ஆனால் எனது மகளுக்கு அவன் துரோகம் செய்துவிட்டான். ஷீசன் கானுக்கு ஏராளமான துணை நடிகைகளுடன் பழக்கம் உள்ளது. நிறைய பெண்களை அவன் ஏமாற்றி உள்ளான். இதை அறிந்து எனது மகள் கேட்ட தால் அவன் எனது மகளை கொடுமை படுத்த தொடங்கிவிட்டான். 3 மாதங்கள் பழகிவிட்டு துரோகம் செய்துள்ளான். அவனை போலீசார் விசாரித்து விட்டு வெளியே விட்டுவிடக்கூடாது. கடுமை யான தண்டனையை அவனுக்கு வாங்கி கொடுக்க வேண்டும்"இவ்வாறு அவர் கூறினார்.

துனிஷா சர்மா - ஷீசன் கான்
இதற்கிடையே நடிகை துனிஷா சர்மா தற்கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி உள்ளது. அவர் கர்ப்பமாக இருந்ததாகவும், லவ் ஜிகாத் மூலம் அவரை மதமாற்ற முயற்சி நடந்ததாகவும் தகவல்கள் பரவின. மும்பை பா.ஜ.க. தலைவர்களும் நடிகர் ஷீசன் கான் மீது மதமாற்ற புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் போலீசார் திட்ட வட்டமாக மறுத்துள்ளனர்.
- 70 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா.
- இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தென்னிந்திய சினிமாவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தற்போது கவலையை தெரிவித்துள்ளார்.

ஜெயசுதா
இது தொடர்பாக ஜெயசுதா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "நடிகை கங்கனா ரணாவத் 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் பல தசாப்தங்களாக தொழில்துறையில் பணியாற்றிய நடிகர்களுக்கு அவர்களின் பணிக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

ஜெயசுதா
கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் எனக்கு கவலையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்கள் நடிப்பதற்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கு, நாங்கள் பல படங்களில் பணியாற்றியும் இன்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை சில சமயங்களில், தென்னிந்திய திரையுலகத்தினரை இந்திய அரசாங்கம் பாராட்டுவதில்லை என்று நான் வருத்தப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
- துனிசா ஷர்மா இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
- நடிகர் ஷீசன் முகமது கான் என்பவர் தற்கொலைக்கு தூண்டியதாக துனிசாவின் தாயார் புகார் கொடுத்தார்.
மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிசா ஷர்மா (வயது 20). மகாரானா பிரதாப் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் இஸ்க், சுப்ஹான் அல்லா, கப்பர் பூஞ்ச்வாலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

துனிசா ஷர்மா
பிதூர், பார்பார் தேக்கோ, கஹானி-2; துர்கா ராணி சிங், தபாங்-3 உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பின் தேனீர் இடைவேளையின் போது மேக்கப் அறைக்கு சென்று வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த படப்பிடிப்பு நிர்வாகிகள் அறைக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு துனிசா ஷர்மா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

துனிசா ஷர்மா
இதையடுத்து துனிசா ஷர்மாவின் தாயார் இதுதொடர்பாக வாலிவ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் துனிசா ஷர்மாவை அவருடன் நடித்த நடிகர் ஷீசன் முகமது கான் என்பவர் தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் துனிசா ஷர்மாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் முகமது கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துனிசா ஷர்மா - ஷீசன் முகமது கான்
இந்நிலையில், நடிகர் ஷீசன் முகமது கானை 4 நாட்கள் போலீஸ் காவலுக்கு கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது, "ஷ்ரத்தா வாக்கர் கொடூர சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் காணப்படும் சூழ்நிலை மற்றும் பின்விளைவுகளை பார்த்தும் நமக்கு முன்பு தடங்கலாக உள்ள வெவ்வேறு சமூகம், வயது வித்தியாசம் ஆகியவற்றையும் துனிசாவிடம் எடுத்து கூறினேன்.

துனிசா ஷர்மா - ஷீசன் முகமது கான்
அதனால், இந்த உறவை முறித்து கொள்ள முடிவு செய்தேன் என்று போலீசில் கூறியுள்ளார். மேலும், துனிசா தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த நேரத்தில் நான் தான் அவரை காப்பாற்றினேன் என்றும் ஷீசன் முகமது கான் கூறியுள்ளார். துனிசா மற்றும் ஷீசன் கான் போன்கள் தடவியல் ஆராய்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ’வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- சேரன் தற்போது ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

தமிழ்க்குடிமகன்
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தமிழ்க்குடிமகன் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் இரண்டு நாட்களில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை நடிகர் சேரன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும், "2 நாட்களில் 20 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள்... இன்னும் 20 லட்சம் மக்களிடம் சொல்வதற்கான செய்தி உள்ள டீஸர் என்பது அவர்கள் பார்த்த வேகத்தில் தெரிகிறது.. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டியது நம் கடமை..." என்று பதிவிட்டுள்ளார்.
2 நாட்களில் 20 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள்... இன்னும் 20 லட்சம் மக்களிடம் சொல்வதற்கான செய்தி உள்ள டீஸர் என்பது அவர்கள் பார்த்த வேகத்தில் தெரிகிறது.. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டியது நம் கடமை... pic.twitter.com/tFqV1nLRPL
— Cheran (@directorcheran) December 25, 2022
- இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

சந்தானம்
இதைத்தொடர்ந்து சந்தானம் மீண்டும் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோவை தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் "இதன் பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Idharku per than 🐅 valai pidikratha 😜#tigerlove #traveldiaries pic.twitter.com/1uW77pmPgz
— Santhanam (@iamsanthanam) December 25, 2022
- இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டியர் டெத்’.
- இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார்.
எஸ்.என். ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டியர் டெத்'.சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். பிரேம்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு நவீன் அண்ணாமலை இசையமைத்துள்ளார்.

டியர் டெத்
இறப்பு என்பது நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் குறித்து கதாசிரியர் ஸ்ரீதர் வெங்கடேசன் கூறும்போது, "உண்மை சம்பவங்களையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்தப்படத்தை உருவாக்கியுளோம். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் படத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

டியர் டெத்
இதுவரை இங்கே இறப்பு என்கிற விஷயத்தைப் பற்றி பேசும்போது எமன் என்கிற ஒரு கதாபாத்திரம் மூலமாகவே பேசியிருக்கிறார்கள். முதன்முறையாக இறப்பே ஒரு கதாபாத்திரமாக மனித உருவில் மாறி பேசினால் எப்படி இருக்கும் என்கிற புதிய முயற்சிதான் இந்த படம். இந்த படத்தில் காதல், அம்மா, குழந்தை, நட்பு என நான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு கதைகளுடன் இறப்பு எப்படி தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை ஹைபர்லிங்க் முறையில் கூறியுள்ளோம்" என்று கூறினார்.
இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்சாரில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாரிசு இசை வெளியீட்டு நேற்று முன்தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
- இதில் தமிழகத்தில் இருந்து பல ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வாரிசு இசை வெளியீட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்த பல ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரசிகர்கள் பலர் உற்சாக மிகுதியால் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின் 'வாரிசு' பட தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று நேரு உள் விளையாட்டரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- துணிவு படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
- இரண்டாவதாக காசேதான் கடவுளடா பாடலும் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தது.
சென்னை:
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்தப் படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் 'சில்லா சில்லா' மற்றும் 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா இன்று வெளியானது. இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்தப் பாடலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
- தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சலபதி ராவ்.
- நடிகர் சலபதி ராவ் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
என்.டி.ராமராவ், கிருஷ்ணா, நாகார்ஜூனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்ளிட்ட பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்தவரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான சலபதி ராவ், இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். 78 வயதாகும் இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சலபதி ராவ்
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் அனுஷ்கா நடிப்பில் வெளியான 'அருந்ததி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சலபதி ராவ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’.
- சில தினங்களுக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் 'ராங்கி'. இப்படத்தில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து தணிக்கை குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். அதன்பின் மேல்முறையீட்டில் படத்தில் 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது. சில தினங்களுக்கு முன்பு 'ராங்கி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராங்கி
இந்நிலையில் 'ராங்கி' படத்தின் புரொமோஷன் பணிக்காக திரிஷா உள்ளிட்ட படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் திரிஷா பேசியதாவது, நான் திரைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது, நான் எப்போதும், நேர்மறையான கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்வேன், எதிர்மறையான கருத்துக்கள் எதையும் நான் கவனித்துக் கொள்வதில்லை. காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக வதந்திகள் கிளப்பியுள்ளனர். அந்த தகவல்கள் ஒரு சதவீதம் கூட உண்மையில்லாதவை, எனக்கும் அரசியலுக்கும் துளியளவும் சம்மந்தமும் இல்லை. என்னிடம் எப்போது திருமணம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் இது போன்ற கேள்விகளை தவிர்ப்பது நல்லது என்று பதிலளித்தார்.
- விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
- இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் குட்டி ஸ்டோரி கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த இசை வெளீயீட்டு விழாவில் வழக்கம்போல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டிக் கதை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு குடும்பம். அதில் அம்மா, அப்பா, அண்ணா, தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்ட்டு வரும்போது சாக்லெட் வாங்கிட்டு வருவார். ரெண்டு பசங்களுக்கும் தருவார். இதில் தங்கச்சி பாப்பா சாக்லெட்டை அப்போதே தின்றுவிடும். அண்ணன் அடுத்த நாளைக்கு பள்ளிக்கு செல்லும் போது சாப்பிடலாம் என ஒரு இடத்தில் மறைத்து வைப்பார்.

விஜய்
அண்ணன் போனதும் தங்கச்சி பாப்பா மறைத்து வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து தின்றுவிடும். இது தினமும் நடக்கும். ஒருநாள் தங்கச்சி பாப்பா அண்ணனிடம், "அன்பு அன்புனு சொல்றாங்களே அன்புனா என்ன அண்ணா ?" என கேட்கும். அப்போது அந்த அண்ணா, "நீ உன்னோட சாக்லெட்டையும் சாப்டுற்ற, எனக்கு வெச்ச சாக்லெட்டையும் சாப்டுற்ற. அது தெரிஞ்சும் தினமும் அங்கயே சாக்லெட் வெக்குறேன்ல அதுதான்மா அன்பு" என கூறுவார். அன்புதான் உலகத்தை வெல்லும் ஆயுதம் என்றார். விஜய் இவ்வாறு கூறியதும் நேரு விளையாட்டு அரங்கேமே ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்தது.






