என் மலர்
சினிமா செய்திகள்
- நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நயன்தாரா பேட்டியளித்திருந்தார்.
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் கடந்த டிசம்பர் 22 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் புரொமோஷனுக்கா நயன்தாரா பேட்டியளித்திருந்தார். அதில், பேய் நம்பிக்கை இருக்கிறதா என்பது குறித்தான கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா, 'அது போன்ற விஷயங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை என்றாலும் நான் தனியாக இருக்கும்போது பயமாக இருக்கும்.

நயன்தாரா
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் பேய்ப் படங்களின் மிகப்பெரிய ரசிகை. சில வருடங்களுக்கு முன்பாக தனியாக பேய்ப் படங்கள் பார்ப்பது என்னுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. முரண்பாடுகள், மோதல்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்திருக்கும் திகில் கதைகள் எப்போதுமே என் விருப்பத்துக்குரியதாய் இருந்திருக்கிறது' என்றார்.
'கனெக்ட்' படத்தின் இந்தி பதிப்பு டிசம்பர் 30,2022 அன்று திரையரங்குகளில் வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.
- இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

பார்த்திபன்
நேற்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தி பதிவிட்டுள்ளார். அதில், வாரிசு! வெற்றியின் வாரிசு! குதூகலத்தின் வாரிசு! கொண்டாட்டத்தின் வாரிசு! ஆடியோ வெளியீட்டு வைபவத்திற்கு ஆடியே அனுப்புகிறேன் வாழ்த்தாக!!! ரஞ்சிதமே- previous collection record-ஐ மிஞ்சிடுமே!!! என்று பதிவிட்டுள்ளார்.
- நடிகை தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிசா ஷர்மா (வயது 20). மகாரானா பிரதாப் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் இஸ்க், சுப்ஹான் அல்லா, கப்பர் பூஞ்ச்வாலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
பிதூர், பார்பார் தேக்கோ, கஹானி-2; துர்கா ராணி சிங், தபாங்-3 உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் நேற்று அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தேனீர் இடைவேளையின் போது நடிகை துனிசா ஷர்மா மேக்கப் அறைக்கு சென்றார். அதன்பிறகு வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவலில்லை. இதனால் சந்தேகம் அடைந்த படப்பிடிப்பு நிர்வாகிகள் அறைக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

துனிசா ஷர்மா
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு துனிசா ஷர்மா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

துனிசா ஷர்மா
இந்நிலையில் துனிசா ஷர்மாவின் தாயார் இதுதொடர்பாக வாலிவ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் துனிசா ஷர்மாவை அவருடன் நடித்த நடிகர் ஷீசன் முகமது கான் என்பவர் தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் துனிசா ஷர்மாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் முகமது கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஷீசன் முகமது கான் ஜோதா அக்பர் என்ற வரலாற்று நாடகத்தில் இளம் வயது அக்பராக நடித்து தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு நாடகங்களிலும் நடித்த அவர் துனிசா ஷர்மாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்களில் சிக்கி இருந்தார்.

துனிசா ஷர்மா - ஷீசன் முகமது கான்
இந்நிலையில் துனிசா ஷர்மா தற்கொலை வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். துனிசா ஷர்மா தற்கொலைக்கு செய்வதற்கு சிறிது நேரம் முன்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், 'தங்கள் பேரார்வத்தால் இயக்கப்படுபவர்கள் நிறுத்தப்படுவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
- அவரோட வெற்றியால் நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது.
- அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன்.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

விழாவில் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் மேடையில் ரஞ்சிதமே பாடலை பாட, அவருடன் ரசிகர்களும் கூட சேர்ந்து பாடினார்கள். பின்னர் பேசிய விஜய் கூறியுள்ளதாவது:

1990 களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தாரு. கொஞ்ச நாள்ல அவரு எனக்கு சீரியசான போட்டியாளரா ஆனாரு. அவரோட வெற்றியால நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது. அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை.
அந்த போட்டியாளர் பேரு ஜோசப் விஜய். உங்க கூட நீங்க போட்டி போடுங்க. தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். இவ்வாறு நடிகர் விஜய் தெரிவித்தார்.
- வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ரசிகர்கள் குவிந்தனர்.
- திரையுலக பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றிரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வந்திருந்த விஜய் ரசிகர்கள் அரங்கில் குவிந்தனர். திரையுலக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் தனது செல்போன் மூலம் செல்பி முறையில் ரசிகர்களை படம் பிடித்து மகிழ்ந்ததுடன், என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பெயரில் அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
முன்னதாக விழா அரங்கில் நுழைவது தொடர்பாக ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரசிகர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழையும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
- நடிகை தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா (வயது 20), திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வசாய் பகுதியில் இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், மேக்கப் அறைக்கு சென்றார். பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது.
நடிகை துனிஷா வரும் 4-ம் தேதி தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இறந்த சம்பவம் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இன்று படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடப்படும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததார். அதுதான் அவர் வெளியிட்ட கடைசி பதிவாகும்.
- விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
- மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

வாரிசு இசை வெளியீட்டு விழா
மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மறைமுகமாக வெளிப்படுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

வாரிசு இசை வெளியீட்டு விழா
இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் கூறியதாவது, "விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று நான் 'சூர்யவம்சம்' திரைப்படத்தின் 175-வது நாள் விழாவில் கூறினேன். தற்போது அது நடந்து விட்டது. விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். நான் அப்போது இதை சொன்ன போது கலைஞர் கருணாநிதி கூட ஆச்சர்யப்பட்டார்" என்று கூறினார்.
- நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'.
- இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

வால்டேர் வீரய்யா
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வால்டேர் வீரய்யா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வால்டேர் வீரய்யா' திரைப்படத்தின் டைட்டில் பாடல் வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
ఇంక రఫ్ ఆడిద్దాం!! 🔥🔥
— Bobby (@dirbobby) December 24, 2022
MEGA MASS Loaded #WaltairVeerayya TITLE song Releasing on Dec 26th 🎶💥
Get ready to witness Mass Moolavirat's Vishwaroopam 🔥#WaltairVeerayyaOnJan13th
Megastar @KChiruTweets @RaviTeja_offl Rockstar @ThisIsDSP @shrutihaasan @ThisIsDSP @MythriOfficial pic.twitter.com/6WfUlcf3Fi
- விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

வாரிசு இசை வெளியீட்டு விழா
மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மறைமுகமாக வெளிப்படுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

வாரிசு
இந்நிலையில், 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் பேசியதாவது, "வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே பாடலுக்கு ஒரு நிமிடம் 20 நொடிகள் ஒரே ஷாட்டில் இடைவெளி இல்லாமல் விஜய் நடனமாடியுள்ளார். இந்த பாடலின் கடைசி ஒரு நிமிடம் நீங்கள் அனைவரும் ஆடுவீர்கள்" என்று கூறியுள்ளார்.
- அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

துணிவு
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் -அஜித்- அனிருத்
இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

வாரிசு
மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மறைமுகமாக வெளிப்படுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

வாரிசு
இந்நிலையில், 'வாரிசு' இசை வெளியீட்டு விழா நுழைவு வாயிலில் ரசிகர்கள் கூட்டமாக நுழைய முயன்றபோது அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரசிகர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழையும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிகில் இசை வெளியீட்டு விழாவில் என் பேனரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என விஜய் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகை உர்பி ஜாவித் தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
- உர்பி ஜாவித்தை துபாய் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக இணைய தளங்களில் தகவல் பரவியது.
பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவர் நைட்டில பாப்புலர் ஆனார். தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவித் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

உர்பி ஜாவித்
சில தினங்களுக்கு முன்பு துபாயில் உர்பி ஜாவித் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் தன்னை வீடியோ எடுத்ததாகவும் அங்கு பொது இடங்களில் வீடியோ எடுப்பது குற்றம் என்பதால் உர்பி ஜாவித்தை கைது செய்து துபாய் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது.

உர்பி ஜாவித்
இதற்கு நடிகை உர்பி ஜாவித் விளக்கமளித்துள்ளார். அவர் கூறும்போது, "என்னை துபாய் போலீசார் கைது செய்யவில்லை. நாங்கள் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி படப்பிடிப்பை நடத்தியதால் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்'' என்று கூறியுள்ளார்.






