என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கைது வதந்திக்கு விளக்கமளித்த பிரபல கவர்ச்சி நடிகை
    X

    உர்பி ஜாவித்

    கைது வதந்திக்கு விளக்கமளித்த பிரபல கவர்ச்சி நடிகை

    • நடிகை உர்பி ஜாவித் தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
    • உர்பி ஜாவித்தை துபாய் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக இணைய தளங்களில் தகவல் பரவியது.

    பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவர் நைட்டில பாப்புலர் ஆனார். தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவித் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


    உர்பி ஜாவித்

    சில தினங்களுக்கு முன்பு துபாயில் உர்பி ஜாவித் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் தன்னை வீடியோ எடுத்ததாகவும் அங்கு பொது இடங்களில் வீடியோ எடுப்பது குற்றம் என்பதால் உர்பி ஜாவித்தை கைது செய்து துபாய் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது.


    உர்பி ஜாவித்

    இதற்கு நடிகை உர்பி ஜாவித் விளக்கமளித்துள்ளார். அவர் கூறும்போது, "என்னை துபாய் போலீசார் கைது செய்யவில்லை. நாங்கள் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி படப்பிடிப்பை நடத்தியதால் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்'' என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×