ரஞ்சிதமே- பழைய ரெக்கார்டை மிஞ்சிடுமே.. பார்த்திபன் பதிவு

புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
ரஞ்சிதமே- பழைய ரெக்கார்டை மிஞ்சிடுமே.. பார்த்திபன் பதிவு
Published on

1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

பார்த்திபன்
பார்த்திபன்

பார்த்திபன்

நேற்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தி பதிவிட்டுள்ளார். அதில், வாரிசு! வெற்றியின் வாரிசு! குதூகலத்தின் வாரிசு! கொண்டாட்டத்தின் வாரிசு! ஆடியோ வெளியீட்டு வைபவத்திற்கு ஆடியே அனுப்புகிறேன் வாழ்த்தாக!!! ரஞ்சிதமே- previous collection record-ஐ மிஞ்சிடுமே!!! என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com