உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் அவதார்- 2 திரைப்படம்

சில தினங்களுக்கு முன்பு அவதார்: தி வே ஆப் வாட்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது.
அவதார்: தி வே ஆப் வாட்டர்
அவதார்: தி வே ஆப் வாட்டர்
Published on

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

அவதார்: தி வே ஆப் வாட்டர்
அவதார்: தி வே ஆப் வாட்டர்

அவதார்: தி வே ஆப் வாட்டர்

13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த 16 ந்தேதி வெளியானது. அவதார்: தி வே ஆப் வாட்டர், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமான அவதாரின் தொடர்ச்சியாகும்.

அவதார்: தி வே ஆப் வாட்டர்
அவதார்: தி வே ஆப் வாட்டர்

அவதார்: தி வே ஆப் வாட்டர்

அவதார் 2 இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய மதிப்பில் ரூ 7 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் 10 நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியது. வரும் நாட்களில் நாட்டில் ரூ.500 கோடியை எதிர்பார்க்கப்படுகிறது. அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com