என் மலர்
சினிமா செய்திகள்

விஜய்
தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்க்கும் 'வாரிசு' பட பாடல்
- வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படல் ‘வாரிசு’.
- இந்த படத்தின் சோல் ஆஃப் வாரிசு பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வாரிசு
'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து சமீபத்தில் 'வாரிசு' திரைப்படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
வாரிசு
இந்நிலையில், சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
#SoulOfVarisu hits 10M+ views now ?
— Sri Venkateswara Creations (@SVC_official) December 31, 2022
▶️ https://t.co/ZMAGrUg4KC#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @KSChithra mam @Lyricist_Vivek @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/gLOeVr0qRX






