என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் கமல்ஹாசன் பல்வேறு வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர்.
    • சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கமல்ஹாசன் கால் பதித்தார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் பல்வேறு வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கமல்ஹாசன் கால் பதித்தார். கடந்த 2008-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் கண்டு வந்தார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றே கமல்ஹாசன் தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    இத்தாலியில் கமல்ஹாசன்

    கமல்ஹாசன் எப்போதுமே கதர் ஆடைகள் பற்றியும் நெசவாளர்கள் நலன் குறித்தும் அடிக்கடி பேசுவார். கதர் ஆடைகளை அணிவதிலும் அதிக ஆர்வம் கொண்டவரான கமல்ஹாசன் அனைவரும் கதர் ஆடைகளை விரும்பி அணிய வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் கதர் ஆடைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவும் நவீன மாடல்களில் கதர் ஆடைகளை உருவாக்கும் விதத்திலும் கமல்ஹாசன் கதர் ஆடை நிறுவனம் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு கே.எச். (ஹவுஸ் ஆப் கதர்) என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த விற்பனையகம் மூலமாக பல்வேறு வடிவிலான கதர் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 'ஆன்லைன்' விற்பனையகமான இந்த நிறுவனத்தின் மூலமாக பலர் கதர் ஆடை களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

    பேஷன் ஷோக்களிலும் கதர் ஆடைகளின் அணி வகுப்பு அதிகரித்துள்ளது. இப்படி ஸ்டைலான கதர் ஆடைகளும் அதிகமாக ஜவுளி சந்தைகளில் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. அதுபோன்ற ஆடைகளையே கமல்ஹாசனின் கே.எச்.விற்பனையகம் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த கதர் ஆடை விற்பனை தொழிலை மேம்படுத்தும் வகையில் கமல்ஹாசன் இத்தாலிக்கு சென்றிருக்கிறார். கதர் ஆடை துணிகளின் வடிவமைப்புகளுடன் கமல்ஹாசன் விமானத்தில் இத்தாலிக்கு பறந்துள்ளார். இவர் இத்தாலி சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”.
    • இப்படம் பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

    அறிமுக இயக்குனர் யூடுயூப் புகழ் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் "பாபா பிளாக் ஷீப்". நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றிகிறார் விருமாண்டி படத்தின் மிகவும் பிரபலமடைந்த நடிகை அபிராமி. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு திரைக்கதையாக, "பாபா பிளாக் ஷீப்" உருவாகி வருகிறது.


    விருமாண்டி அபிராமி - ராஜ்மோகன்

    விருமாண்டி அபிராமி - ராஜ்மோகன்

    இப்படம் குறித்து இயக்குனர் ராஜ்மோகன் கூறியதாவது, "பாபா பிளாக் ஷீப்" பள்ளிக்குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமி அவர்களை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.


    பாபா பிளாக் ஷீப் படப்பிடிப்பு

    பாபா பிளாக் ஷீப் படப்பிடிப்பு

    மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள். இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தில் மதுரை முத்து, ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன் என்றார். 

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா, நேற்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக உரையாடினார்.
    • அப்போது விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ராஷ்மிகா பளார் பதிலளித்தார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னடம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


    விஜய் - ராஷ்மிகா
    விஜய் - ராஷ்மிகா

    ராஷ்மிகா நேற்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா காதல் (லவ்) என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அதன்பின்னர் இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படம் அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார்.

    வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார்.

     

    துணை நடிகை லிண்டா

    துணை நடிகை லிண்டா

    இப்படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    • இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள தேதி குறித்த புதிய தகவல் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

     

    புஷ்பா

    புஷ்பா

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    புஷ்பா

    புஷ்பா

    இந்நிலையில் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தாளான வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த டீசர் படத்தின் கதைக்களத்தை உணத்தும் விதத்தில் மூன்று நிமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • 95-வது ஆஸ்காரில் சிறந்த ஆவணக் குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் விருது வென்றது.
    • இந்த ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றனர்.


    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்


    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

     

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது ஆஸ்கர் விருதை முதலமைச்சரிடம் காண்பித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார்.

    • 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் பின்னணி இசை பணிகள் லண்டனில் நடைபெற்று வருவதாக படக்குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் தயாரான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, 'பொன்னியின் செல்வன் 2' அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

     

    பின்னை இசையில் தீவிரம் காட்டும் படக்குழு

    பின்னை இசையில் தீவிரம் காட்டும் படக்குழு


    முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான 'அக நக' பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியான நிலையில், இப்படத்தின் பின்னணி இசை பணிகள் லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்து மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • அஜித்-ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித், அதன்பின்னர் ஆசை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன் என பல படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசம் படுத்திக் கொண்டார். இவர் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைப்பாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய தமிழ் படங்களில் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    அஜித்-ஷாலினி

    அஜித்-ஷாலினி


    இந்நிலையில் அஜித்-ஷாலினி இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. அஜித்-ஷாலினி தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களுக்கு இருவரும் இணைந்து நடித்த உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற  பாடலின் வரிகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தங்கலான்

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் கதைக்களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் 3 வாரங்களில் முடிவடையவுள்ளதாகவும் அடுத்த 15 நாட்கள் ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என தகவல் வெளியானது.


    தங்கலான்

    இந்நிலையில், 'தங்கலான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பேசியதாவது, "தங்கலான் உலக திரைப்படம். இப்படத்தை எவ்வளவு மொழிகளில் மொழிப்பெயர்க்க முடியுமோ அத்தனை மொழிகளிலும் மொழிப்பெயர்ப்போம். இந்த படத்தை பார்க்காத மக்களே இல்லை என்ற அளவிற்கு பல மொழிகளில் டப் செய்யவுள்ளோம்" என்று பேசினார்.

    • தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    • குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று வரும் நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சொன்னதைச் செய்தார் முதல்வர் உரிமைத்தொகை அறிவித்துவிட்டார். சுயமரியாதையின் மறுபெயர் பணம், சுதந்திரத்தின் மறுபெயர் பணம் ஒரே அறிவிப்பில் பெண்களின் சுதந்திரம் சுயமரியாதை இரண்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். வாழ்த்துவோம் முதல்வரை போகப் போக இதை இந்தியா பின்பற்றும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42.
    • தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா 42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், சூர்யா -42 படத்தின் பட்ஜெட்டிற்கு இயக்குனர் ராஜமவுலி தான் காரணம் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இந்த படத்தின் பட்ஜெட் இதுவரை சூர்யா நடித்துள்ள படங்களின் பட்ஜெட்களிலிருந்து மூன்று மடங்கு பெரியது. இது சூர்யாவிற்கே தெரியாது. இன்று ஒரு கே.ஜி.எப் அல்லது சூர்யா 42 போன்ற படங்கள் மும்பையை ரூல் பண்ணுகிறது என்றால் அதற்கு காரணம் ராஜமவுலி தான்.


    சூர்யா 42

    ஏனென்றால் அவர் பாகுபலி என்ற திரைப்படம் எடுக்கவில்லை என்றால் இன்று நமக்கு மும்பையில் வேலையே இல்லை. சூர்யா 42 படத்தின் ரிசல்ட்டுக்கு காரணம் நாங்களாக இருக்கலாம். ஆனால், பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமவுலி தான் அவர் அந்த கதவை திறந்திருக்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய மார்க்கெட் இருப்பதே நமக்கு தெரியாமல் இருந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.


    விடுதலை போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், விடுதலை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடுதலை' திரைப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    ×