என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42.
- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சூர்யா -42 படத்தின் பட்ஜெட்டிற்கு இயக்குனர் ராஜமவுலி தான் காரணம் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இந்த படத்தின் பட்ஜெட் இதுவரை சூர்யா நடித்துள்ள படங்களின் பட்ஜெட்களிலிருந்து மூன்று மடங்கு பெரியது. இது சூர்யாவிற்கே தெரியாது. இன்று ஒரு கே.ஜி.எப் அல்லது சூர்யா 42 போன்ற படங்கள் மும்பையை ரூல் பண்ணுகிறது என்றால் அதற்கு காரணம் ராஜமவுலி தான்.

சூர்யா 42
ஏனென்றால் அவர் பாகுபலி என்ற திரைப்படம் எடுக்கவில்லை என்றால் இன்று நமக்கு மும்பையில் வேலையே இல்லை. சூர்யா 42 படத்தின் ரிசல்ட்டுக்கு காரணம் நாங்களாக இருக்கலாம். ஆனால், பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமவுலி தான் அவர் அந்த கதவை திறந்திருக்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய மார்க்கெட் இருப்பதே நமக்கு தெரியாமல் இருந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.
- வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
- இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், விடுதலை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடுதலை' திரைப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Director #VetriMaaran 's #ViduthalaiPart1 worldwide release on March 31st#ViduthalaiPart1FromMarch31 @ilaiyaraaja Musical@sooriofficial @elredkumar @rsinfotainment @BhavaniSre @VelrajR @DirRajivMenon @menongautham @jacki_art @GrassRootFilmCo @RedGiantMovies_ @mani_rsinfo pic.twitter.com/4bh0c5q43z
— VijaySethupathi (@VijaySethuOffl) March 20, 2023
- திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’
- இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான 'பொன்னியின் செல்வன்' படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, 'பொன்னியின் செல்வன் 2' அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்
முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான 'அக நக' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
- இப்படம் வருகிற ஏப்ரம் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் ரமணா, கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார்.

1947- ஆகஸ்ட் 16
இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.

1947- ஆகஸ்ட் 16
அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், '1947- ஆகஸ்ட் 16' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42.
- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சூர்யா 42
இந்நிலையில், சூர்யா -42 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சூர்யா -42 படத்தின் டைட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டீசர் மே மாதம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் ஆர்.சி.15.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.சி.15
ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் குதிரை மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ராம் சரண் 15-வது படத்தை முடிக்கும் பயணத்தை உத்வேகமாக வைத்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
A journey that has me back to back in the saddle!
— Shankar Shanmugham (@shankarshanmugh) March 19, 2023
Towards #RC15 pic.twitter.com/spv0c18y9R
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
- இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான 'பொன்னியின் செல்வன்' படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, 'பொன்னியின் செல்வன் 2' அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன்
முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி, நடிகை திரிஷாவை ஜாலியாக கலாய்த்துள்ளார். இது தொடர்பான சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன்
அதில், இளையபிராட்டி… hi. என்ன பதிலே இல்லை என்று கார்த்தி பதிவிட்டுள்ளார். இதற்கு திரிஷா என்ன வாணர்குல இளவரசே? என்று பதிலளித்துள்ளார். 'தங்கள் தரிசனம் கிடைக்குமா..?' என்று கார்த்தி கேட்டுள்ளார். இதற்கு ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன் என்று திரிஷா குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுகளுக்கு ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன் https://t.co/h62Z1d9IMR
— Trish (@trishtrashers) March 20, 2023
- நடிகர் சல்மான்கானின் உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது.
- ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவரது தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர்.

சல்மான்கான்
இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் கொடுத்த புகாரின் பேரில் பந்த்ரா போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி யான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் தனது கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

புஷ்பா
இந்நிலையில் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரகாக இருக்கும் ரஜினியின் ரசிகர் ஒருவர் கால்பந்து அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார்.
- இதுகுறித்து ரஜினி வீடியோ ஒன்று வெளியிட்டு கால்பந்து விளையாட்டு குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரகாக இருக்கும் ரஜினியின் ரசிகர் ஒருவர் கால்பந்து அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் வேர்ல்டு கிளாஸ் யூத் ஃபுட்பால் அகாடமி வருவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். ஃபுட் பாலை கிங் ஆஃப் கேம்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. முதல்ல நம்ம இந்தியாவுல அது ரொம்ப பாப்புலரா இருந்தது.

அதன்பின்னர் கிரிக்கெட் வந்து அது டாமினேட் செய்து விட்டது. இப்போது கேரளா, கொல்கத்தாவில் ஃபுட் பால் அதிகம் விளையாடப்பட்டு வருகிறது. இப்போ ஃபுட் பாலோட விழிப்புணர்வு ரொம்ப அதிகமா இருக்கு. கடைசியாக நடந்த உலககோப்பை ஃபுட் பால் போட்டியை பார்க்காதவர்களே கிடையாது. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி எல்லோருடைய ஹீரோவாக ஆகிட்டார்.

வீடியோ வெளியிட்ட ரஜினி
ஃபுட் பால் ஸ்கில்லோடு ஆடக்கூடிய ஒரு வீர விளையாட்டு, அற்புதமான விளையாட்டு. சின்னச் சின்ன நாடுகள் கூட ஃபுட் பால் விளையாடி உலக அளவுள்ள அந்த நாட்டை பற்றி தெரிய வச்சிருக்கு. ஆனால் இந்தியா ஃபுட் பால் விளையாட்டில் இன்னும் பேர் வாங்கவில்லை என்பது வருத்தமான விஷயம். இதற்கு யூத் ஃபுட் பால் அகாடமி நிச்சயம் வரவேற்கத்தக்கது. அவங்களுடைய இலக்கு சென்னையிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டு மாதிரியான விளையாட்டு வீரர்களை இந்த அகாடமி கொடுக்கணும். இதில் இருக்கக்கூடிய அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்'' என்று ரஜினி பேசியுள்ளார்.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.
- இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர்.

லால் சலாம் படத்தின் பூஜை
இவர்களது பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால் தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் பொது மக்கள் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர். இதையறிந்த தனியார் பாதுகாவலர்கள், பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை நீக்கினர். மேலும் பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

லால் சலாம் படத்தின் பூஜை
இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும் தாசில்தார் அலுவலக நுழைவு பாதையில், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, யாரும் செல்ல முடியாதவகையில் மக்களை தனியார் பாதுகாவலர்கள் தடுத்தனர். இதனால் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விடுதிகளுக்கு செல்ல முடியாமல் மாணவிகள் தவித்ததாகவும், இதேபோல் தாசில்தார் அலுவலகம், இ-சேவை மையத்தை தேடி வந்த பொதுமக்களும், ஊழியர்களும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு
இந்நிலையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயம்.
- லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அளித்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






