படப்பிடிப்பின்போது பொது மக்களுக்கு இடையூறு- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை விசாரிக்க கலெக்டர் உத்தரவு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்றது.
லால் சலம் படக்குழு
லால் சலம் படக்குழு
Published on

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர்.

லால் சலாம் படத்தின் பூஜை
லால் சலாம் படத்தின் பூஜை

லால் சலாம் படத்தின் பூஜை

இவர்களது பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால் தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் பொது மக்கள் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர். இதையறிந்த தனியார் பாதுகாவலர்கள், பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை நீக்கினர். மேலும் பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

லால் சலாம் படத்தின் பூஜை
லால் சலாம் படத்தின் பூஜை

லால் சலாம் படத்தின் பூஜை

இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும் தாசில்தார் அலுவலக நுழைவு பாதையில், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, யாரும் செல்ல முடியாதவகையில் மக்களை தனியார் பாதுகாவலர்கள் தடுத்தனர். இதனால் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விடுதிகளுக்கு செல்ல முடியாமல் மாணவிகள் தவித்ததாகவும், இதேபோல் தாசில்தார் அலுவலகம், இ-சேவை மையத்தை தேடி வந்த பொதுமக்களும், ஊழியர்களும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு
திருவண்ணாமலையில் நடைபெற்ற லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு

திருவண்ணாமலையில் நடைபெற்ற லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு

இந்நிலையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com