என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பூவிழி வாசலிலே, மனிதன், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுவரன்.
    • ரகுவரன் மார்ச் 19ம் தேதி 2008ஆம் ஆண்டு காலமானார்.

    பூவிழி வாசலிலே, மனிதன், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுவரன். பாட்ஷா திரைப்படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாப்பாத்திரம் இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் நடிகை ரோகினையை கடந்த 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர், 2004ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ரகுவரன் மார்ச் 19ம் தேதி 2008ஆம் ஆண்டு காலமானார்.

    இந்நிலையில் இன்று நடிகர் ரகுவரனின் நினைவு தினத்தையொட்டி அவரது மனைவியும் நடிகையுமான ரோகினி சமூக வலைத்தளத்தின் வாயிலாக அவரை நினைவு கூர்ந்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, ரகுவரன் இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார். மேலும் ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். பகாசூரன் வெற்றி விழா இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.




    'பகாசூரன்' திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.




    இந்நிலையில் பகாசூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 28ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சஞ்சய் தத் நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. நேற்று முன்தினம் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளதாக அறிவித்தனர்.


    இந்நிலையில் லியோ படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு இந்த வார இறுதியில் முடிவடையும் என்றும், இரண்டு வார இடவேலைக்கு பின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜீ5 வழங்கும் "செங்களம்" இணையத் தொடர் மார்ச் 24ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
    • "செங்களம்" இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள செங்களம். இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ளார். இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.




    இந்நிகழ்வினில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் அமீர் பேசியதாவது, இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிரைலர் பார்த்த போது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. 




    ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே,  அது நல்ல படைப்பாகத் தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த டிரைலரில் முதலில் என்னைக் கவர்ந்தது இசை தான் மிகச்சிறந்த இசை. காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ஜீ5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப்படைப்பாக அமையும். அனைவருக்கும் நன்றி.


    "செங்களம்" இணையத் தொடர் மார்ச் 24ம் தேதியன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல.
    • இப்படத்தில் இசை வெளியிட்டு விழா நேற்று நடைெற்றது.

    சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பத்து தல. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 




    இந்நிகழ்வில் பேசிய சிம்பு, "நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் ஓடியது. அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது. அது மட்டும் தான் நினைத்தேன். படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாதுனு நினைத்தேன். ஏனென்றால் நாம் நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனிமே சந்தோஷமாக இருக்க வேண்டும்.


    இந்தப் படத்தை கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடித்திருப்பார். அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும் என தயங்கினேன். அதையும் தாண்டி இந்தப் படம் ஒத்துக் கொண்டதற்கு காரணம் கௌதம் தான். சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்கு உண்டு. ஏனென்றால் இங்க தட்டி விடுவதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை.




    எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் உள்ளனர். எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையுதா இல்லையோ, கெளதம் கா்த்திக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். கெளதமிற்காக மட்டுமே இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.


    எல்லோரும் என்னிடம், 'முன்னாடி உங்கள் பேச்சில் ஒரு எனர்ஜி இருக்கும். இப்போது எல்லாம் சாஃப்டாக பேசுறீங்கனு கேட்கிறார்கள். அதுக்கு ஒரு காரணம் உள்ளது. முன்பெல்லாம் 'நான் யாருனு தெரியுமாடானு' என்ற அளவுக்கு பேசியிருக்கேன். ஒப்புக்கொள்கிறேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன்; என் கதை முடிந்துவிட்டது எனப் பேசினார்கள்.




    அந்த நேரத்தில் நான் தான் எனக்கு துணையாக இருந்தேன். அதனால் தான் அதுபோன்ற கத்தி பேசுவது எல்லாம் நடந்தது. மாநாடு படத்தை கொண்டாடி, வெந்து தணிந்தது காடு படத்தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்போது இந்த மேடையில் கொண்டுவந்து என்னை நிறுத்தியுள்ளீர்கள். அப்புறம் எப்படி கத்தி பேச முடியும் பணிந்து தான் பேச முடியும்.


    இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை; செயல் மட்டும்தான். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.


    இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -2'.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் தயாரான 'பொன்னியின் செல்வன்' படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, 'பொன்னியின் செல்வன் 2' அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 




    இந்த படத்துக்கும் முதல் பாகம் போன்று வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற 'அக நக' என்ற பாடல் நாளை (திங்கட்கிழமை) மாலை வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் திரிஷா கையில் வாளை பிடித்தபடி நிற்க எதிரில் கார்த்தி கண்ணை துணியால் கட்டி முட்டிப்போட்டுக்கொண்டு இருக்கிறார். 




    'பொன்னியின் செல்வன் -2' படத்தின் முதல் பாடலான 'அக நக' பாடல் வருகிற 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் 6 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகிற 29-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். 


    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.




    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர்.




    இவர்களது பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால் தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் பொது மக்கள் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர். இதையறிந்த தனியார் பாதுகாவலர்கள், பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை நீக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

    • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.




    இந்த நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது. இந்த படத்தின் டிரைலர் இரவு 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி 'பத்து தல' திரைப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
    • சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.

    தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷ் அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.


    சாக்ஷி அகர்வால்

    இந்நிலையில் சாக்ஷி அகர்வால் பாவாடை, தாவணியில் இருக்கும் புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில்பகிர்ந்து 'ஒரு ஆடை உங்களது முழு தோற்றத்தையும் எப்படி மாற்றும்' என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.


    • ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.
    • இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருது கிடைத்தது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' படலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து படக்குழுவினருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    பிரபு தேவா பதிவு

    அதுமட்டுமல்லாமல், 'நாட்டு நாட்டு' பாடலுக்கு பிரபலங்கள் பலர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபு தேவா நடன கலைஞர்களுடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.


    திரிஷ்யம்

    'திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது என்றும் அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும் என்றும் கூறியிருந்தார்.


    திரிஷ்யம்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகத்தினை தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நேற்று மும்பையில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை பார்த்தார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


    ரஜினி

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து பார்த்தார்.


    உத்தவ் தாக்கரேவை சந்தித்த ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினி மகராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை மும்பை, மாட்டோஸ்ரீ இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இருவரின் திடீர் சந்திப்பிற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    ×