என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நேற்று மும்பையில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை பார்த்தார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


    ரஜினி

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து பார்த்தார்.


    உத்தவ் தாக்கரேவை சந்தித்த ரஜினி

    இந்நிலையில், நடிகர் ரஜினி மகராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை மும்பை, மாட்டோஸ்ரீ இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இருவரின் திடீர் சந்திப்பிற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பத்து தல

    இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    பத்து தல

    இதையடுத்து, 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு நியூ லுக்கில் வந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பத்து தல' திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.


    பொன்னியின் செல்வன் -2

    இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


    பொன்னியின் செல்வன் -2

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தியின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், அனைவரும் விரும்பும் வந்தியத்தேவனாக கார்த்தி மாறியது எப்படி? என்பதை பாருங்கள்" என்று குறிப்பிட்டு, முதல் பாடலான 'அக நக' பாடல் வருகிற 20-ஆம் மாலை 6 மணிக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளது.


    • நடிகை ஆத்மிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடித்த ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் நேற்று வெளியானது.

    கடந்த 2017-ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இவர் கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார்.


    ஆத்மிகா

    சமீபத்தில் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தில் நடித்திருந்தார். ஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஆத்மிகா

    இப்படம் நேற்று (மார்ச் 17) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை ஆத்மிகா, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.


    • தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட்
    • பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் பல ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் கொச்சியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


    இன்னசென்ட்

    அவருக்கு புற்று நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இன்னசென்ட் சில வருடங்களுக்கு முன்பாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்தார். அன்றிலிருந்து புற்று நோய் குறித்த விழிப்புணர்வை சமயம் கிடைக்கும் போதெல்லாம் பொது இடங்களில் பேசி வந்தார். தன்னுடைய அனுபவத்தை 'புற்று நோய் வார்டில் சிரிப்பு' என்ற பெயரில் புத்தகமாகவே எழுதி பதிவு செய்திருந்தார்.

    இது புற்று நோயால் ஏற்பட்ட மன அழுத்தத்தை எப்படி சமாளித்தார் என்பதை வெளிப்படுத்தியிருந்தது. அவர் புற்று நோய் தாக்கத்தில் சிகிச்சை பெறுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நோயின் தீவிரத்தால் தற்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    • ஆஷிமா சிப்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மிசஸ்.சாட்டர்ஜி விசஸ் நார்வே.
    • இந்த படத்தில் நடிகை ராணி முகர்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகை ராணி முகர்ஜி நடித்திருக்கும் மிசஸ்.சாட்டர்ஜி விசஸ் நார்வே திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஷிமா சிப்பர் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் ஒரு பெங்காலி தாய் நார்வே நாட்டில் கணவருடன் வசித்து வரும் போது தன்னுடைய குழந்தைகளை பராமரிப்பதில் நார்வே நாட்டு சட்ட திட்டத்தை கடைபிடிக்கவில்லை என்று கூறி, அவரிடமிருந்து குழந்தையை பறித்து நார்வே நாட்டு அதிகாரிகள் காப்பகத்தில் வைக்கிறார்கள். இந்தக் குழந்தைகளை இந்திய அரசின் உதவியோடு சட்டப் போராட்டம் நடத்தி மீட்கும் தாயாக ராணி முகர்ஜி நடித்திருந்தார்.


    மிசஸ்.சாட்டர்ஜி விசஸ் நார்வே

    இதன் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு ராணி முகர்ஜியின் நடிப்பிற்கு பாராட்டும் கிடைத்தது, படம் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் நார்வே நாட்டின் தூதரக அதிகாரிகள் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தங்கள் நாட்டின் சட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள். மேலும் ஒரு தாய் கையால் குழந்தைக்கு உணவு கொடுப்பதாலும் ஒரே படுக்கையை கொடுப்பதாலுமே கடுமையாக சட்டம் செயல்படுத்தப்படும் என்பது தவறு என்று கூறியிருக்கிறார்கள்.

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.


    தசரா

    இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. 'தசரா' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஐந்து மொழிகளில் 20 மில்லியன் பார்வையாளர்களையும் 460 ஆயிரம் லைக்குகளையும் கடந்தது.


    தசரா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தசரா' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 36 நிமிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்.)

    இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ராம் சரண் -அமித்ஷா- சிரஞ்சீவி

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலில் நடனமாடிய நடிகர் ராம் சரணை நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிரஞ்சீவியும் உடனிருந்தார். மேலும், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் 'இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘பகாசூரன்’.
    • மோகன் ஜி சமீபத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    செல்வராகவன் - மோகன் ஜி

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் தனது அடுத்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இயக்குனர் மோகன் ஜி தெரிவித்திருந்தார்.


    ரிச்சர்ட் ரிஷி

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், "இவரு யாருன்னு தெரியுதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார். நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்..." என்று குறிப்பிட்டிருந்தார்.


    ரிச்சர்ட் ரிஷி

    இந்நிலையில், தற்போது இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம்" என்று ரிச்சர்ட் ரிஷி புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • நடிகை கங்கனா ரனாவத் ’சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இவரின் காட்சிகள் நிறைவுபெற்றதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கங்கனா ரனாவத்

    இவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர். தற்போது கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.


    கங்கனா ரனாவத் பகிர்ந்த வீடியோ

    அந்த அறிவிப்பு பலகையில், "வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். அதில் உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிறரை மிரட்டும் வகையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைப்பது சரிதானா..? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • சிம்புவின் ’பத்து தல’ திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    சிம்பு

    இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நீண்ட முடியுடன் இருக்கும் சிம்புவின் நியூலுக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவர் விமான நிலையம் செல்லும் வீடியோவையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    வாத்தி

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து 'வாத்தி' திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


    வாத்தி போஸ்டர்

    இந்நிலையில், 'வாத்தி' படத்தின் புதிய வசூல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    'வாத்தி' திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


    ×