இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம் - மோகன் ஜி

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘பகாசூரன்’. மோகன் ஜி சமீபத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மோகன் ஜி
மோகன் ஜி
Published on

பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

செல்வராகவன் - மோகன் ஜி

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் தனது அடுத்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளதாக இயக்குனர் மோகன் ஜி தெரிவித்திருந்தார்.

ரிச்சர்ட் ரிஷி

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், "இவரு யாருன்னு தெரியுதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார். நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்..." என்று குறிப்பிட்டிருந்தார்.

ரிச்சர்ட் ரிஷி

இந்நிலையில், தற்போது இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம்" என்று ரிச்சர்ட் ரிஷி புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com