என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சிம்புவின் ’பத்து தல’ திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    சிம்பு

    இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நீண்ட முடியுடன் இருக்கும் சிம்புவின் நியூலுக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவர் விமான நிலையம் செல்லும் வீடியோவையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    வாத்தி

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து 'வாத்தி' திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


    வாத்தி போஸ்டர்

    இந்நிலையில், 'வாத்தி' படத்தின் புதிய வசூல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    'வாத்தி' திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், 'லியோ' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சஞ்சய் தத் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதனை புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ள படக்குழு பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.



    அதில், "நன்றி சஞ்சய் தத் சார், நீங்கள் மிகவும் இனிமையாக இருந்தீர்கள். எங்கள் படக்குழுவினர் உங்கள் நடிப்பை அருகில் பார்த்து மகிழ்ந்தார்கள். எப்போதும் போல் நீங்கள் சிறப்பாக நடித்தீர்கள். உங்களை சென்னை படப்பிடிப்பில் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.


    பொன்னியின் செல்வன் -2

    இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.


    பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் முதல் பாடலான 'அக நக' பாடல் வருகிற 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் வாளோடு நிற்கும் திரிஷா முன்பு நடிகர் கார்த்தி கண்ணை கட்டிக் கொண்டு மண்டியிட்டு நிற்கிறார். இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஐ’.
    • இப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஐ'. இதில், விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    இப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், 'ஐ' படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஐ' என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. தமிழில் 'ஐ' என்பது வியப்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கு அர்த்தம் உள்ளதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென வாதிட்டார்.


    இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிப்பதற்கான சலுகையாக அரசு கேளிக்கை வரி விலக்கை அறிவித்தது. அந்த சலுகையை உரிமையாக கோர முடியாது. நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும். பெயரில் தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்திற்காகவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

     

    பிச்சைக்காரன் 2

    பிச்சைக்காரன் 2


    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது.

     

    பிச்சைக்காரன் 2

    பிச்சைக்காரன் 2


    இப்படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு போஸ்டர் வெளியிட்டு விஜய் ஆண்டனி நேற்று அறிமுகப்படுத்தினார். மேலும் பிக்கிலி பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடலை இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.


    லால் சலாம் படப்பிடிப்பு

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    லால் சலாம் படப்பிடிப்பு

    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு பழமையான அம்மன் கோவிலில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை தற்செயல் என்று சொல்லலாம் அல்லது சில சமயங்களில் கடவுள் தனது குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான இனிமையான சிறிய வழிகளைக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் 'ஆர்சி15'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெற்று வருகிறது. ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக பேசப்பட்டது.


     

    ஆர்சி15

    ஆர்சி15


    இந்நிலையில் ஆர்சி15 படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு சிஇஒ (CEO - Chief Electoral Officer) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மார்ச் 27ம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகை டாப்சி தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.
    • பயிற்சியாளரால் தான் அவமதிக்கப்பட்டதைச் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

    ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்ஸிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்க வருவதற்கு முன்பாக படித்துக் கொண்டிருக்கும்போது, மாடலிங் துறையில் ஈடுபடுவதில் கவனம் செலுத்தினார்.


    டாப்சி

    அந்த நாட்களில் அவருக்குப் பயிற்சிக்கொடுத்த போது பயிற்சியாளரால் தான் அவமதிக்கப்பட்டதைச் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் அவரோடு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் கங்கனா ரணாவத்தை நேரில் பார்த்தால் என்ன தோன்றும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "கங்கனாவைப் பார்த்தால் ஹலோ சொல்லுவேன். கங்கனா நல்ல நடிகை. அவரைப்போல நான் இருப்பதாக யாராவது சொன்னால் எனக்கு மகிழ்ச்சியே" என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

    • நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர்.
    • சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

    சமீபத்தில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். உரிய அனுமதியின்றி வீட்டில் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


    ரோபோ சங்கர்

    ரோபோ சங்கர்

    இந்நிலையில் ரோபோ சங்கரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிவிமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    டாடா

    இதைத்தொடர்ந்து கவின் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடன் படக்குழு பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    பிரியங்கா மோகன்

    நடிகை பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆண்ட்ரியா.
    • இவர் தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆண்ட்ரியா. நடிகராக மட்டுமல்லாது பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்தார். கண்ணும் கண்ணும் நோக்கியா, இதுவரை இல்லாத உணர்விது, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல பாடலகளை பாடி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

     

    ஆண்ட்ரியா

    ஆண்ட்ரியா


    சில படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    ×