என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆண்ட்ரியா.
- இவர் தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆண்ட்ரியா. நடிகராக மட்டுமல்லாது பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்தார். கண்ணும் கண்ணும் நோக்கியா, இதுவரை இல்லாத உணர்விது, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல பாடலகளை பாடி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ஆண்ட்ரியா
சில படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- கீர்த்தி சுரேஷ், நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
- தற்போது இவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.
தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
Blooming bold! ?#JustForFun pic.twitter.com/9Um3kuN5fv
— Keerthy Suresh (@KeerthyOfficial) March 16, 2023
- அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.
- தற்போது அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.
அஜித்
இதைத்தொடர்ந்து, 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது. தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அஜித்
அஜித்
இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். நடிகர் அஜித் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ராஷ்மிகா.
- இவர் நடித்த புஷ்பா திரைப்படம் சினிமா பயணித்தில் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தி மொழி படங்களிலும் நடிக்கிறார்.

ராஷ்மிகா
ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா காதலித்தார். 2017-ல் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அடுத்த வருடமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும் மறுத்தார்கள்.

இந்நிலையில் 23 வயது இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது 26 வயது ராஷ்மிகாவுக்கு காதல் ஏற்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் சுப்மன் கில் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆமாம் என்று கண்ணடித்தபடி சிரித்தார். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. சுப்மனும் ஏற்கனவே ராஷ்மிகா மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் சப்தம்.
- சமீபத்தில் இப்படத்தில் லைலா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமனின் இசையில் 'மழையே மழையே' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

லைலா - சப்தம்
சமீபத்தில் ஈரம் படத்தின் கூட்டணியான இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சப்தம் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்பு நடிகை லைலா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சப்தம் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு நடிகர் ஆதி அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தொடர்சியாக நடிகைகள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Welcome onboard @SimranbaggaOffc!! Happy that #Sabdham marks your 50th film! @dirarivazhagan @7gfilmssiva @Aalpha_frames #LakshmiMenon @Lailalaughs @KingsleyReddin @Dop_arunbathu @EditorSabu @Manojkennyk @stunnerSAM2 @Viveka_Lyrics @teamaimpr @decoffl pic.twitter.com/xzG5qKe3kT
— Aadhi? (@AadhiOfficial) March 16, 2023
- பாரம்பரிய முறைப்படி பவித்ரா லோகேஷ்-நரேஷ் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
- பவித்ரா லோகேஷ் குறித்து முதல் கணவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்
இதையடுத்து பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்
சில தினங்களுக்கு முன்பு நரேஷ்-பவித்ரா லோகேஷ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தனர். இவர்களின் திருமணம் கடந்த சில மாதங்களாக தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் திருமணத்திற்கு பிறகு துபாய்க்கு தேனிலவு சென்று உள்ளனர்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்
தற்போது பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் தனது மவுனத்தை கலைத்துள்ளார். பவித்ரா லோகேஷின் நடத்தை குறித்து அவர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார், அந்த வாழ்க்கைக்காக அவர் எதையும் செய்வார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. நரேஷின் விஷயத்தில் வித்தியாசமான பிளான் போட்டு உள்ளார். அவரின் ரூ.1500 கோடி சொத்தை அபகரிப்பதற்காக நரேசுடன் திருமண நாடகம் தொடங்கியுள்ளார். பணத்துக்காக என்னை விவாகரத்து செய்தார் பவித்ரா லோகேஷ். நரேஷ்க்கு இது இன்னும் புரியவில்லை. என்றாவது ஒரு நாள் தெரிந்து கொள்வார் என கூறினார்.

பவித்ரா லோகேஷ்
நரேஷின் 4வது மனைவி பவித்ரா லோகேஷ். பவித்ரா லோகேஷை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள நரேஷ் தனது 3வது மனைவி ரம்யா ரகுபதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் ரம்யா விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வரும் திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பிச்சைக்காரன் 2 - விஜய் ஆண்டனி
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது. 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் ஆண்டனி பகிர்ந்த போஸ்டர்
இந்நிலையில் 'பிச்சைக்காரன் -2' படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு போஸ்டர் வெளியிட்டு விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தியுள்ளார். அதில், நண்பா.. இவன்தான் பிக்கிலி. கொஞ்சம் கவலப்படுங்க, முடிஞ்சா பயப்புடுங்க. இவனப்பத்தி, நாளைக்கி மாலை (evening) 4 மணிக்கி, பிக்கிலி பாடல்-ல இன்னும் நிறைய சொல்றேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். மேலும் பிக்கிலி போஸ்டர் தங்களை பயமுறுத்துவதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- அனிருத் தற்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
- இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலை இல்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, வேதாளம், விவேகம், பேட்ட, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஆட்டோகாரனாக மாறிய அனிருத்
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை வைப் செய்ய வைத்துள்ளது. காக்கி சட்டை அணிந்து ஆட்டோகாரன் கெட்டப்பில் ஆட்டோவில் அமர்ந்து ரஜினியின் நான் ஆட்டோகாரன் என்ற பாடலை இணைத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் எஜமான்.
- இப்படத்தின் நினைவுகளை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான படம் எஜமான். இப்படத்தில் மீனா, ஐஷ்வர்யா, நெப்போலியன், மனோரம்மா, கவுண்டமணி, செந்தில், உதயகுமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ரசிகை எழுதிய கடிதம்
இந்நிலையில் எஜமான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ள கடிதம் ஒன்று இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1993ம் ஆண்டு ரசிகை ஒருவர் எஜமான் படத்தை பார்த்துவிட்டு அதில் வரும் ரஜினியின் வானவராயன் கதாப்பாத்திரத்தை போன்று மாப்பிள்ளை தேடிவருவதாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடித்தத்தை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
A letter for #Yejaman
— AVM Productions (@avmproductions) March 16, 2023
In the 80's movie reviews from the public were rare and few. So, Shri M. Saravanan decided to ask people to send their reviews about #Yejaman by post. While a lot of letters came with so much for the film, one stood out. (1/4) pic.twitter.com/Td4zNxAZ05
- இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’.
- இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

கஸ்டடி டீசர்
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

கஸ்டடி டீசர்
இந்நிலையில் கஸ்டடி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், காயம் பட்ட மனசு ஒருத்தன எந்த எல்லைக்கு வேணும்னாலும் கொண்டுபோகும் போன்ற மாசான வசனங்கள் இடம்பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டீசரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- ஜெயம் ரவி நடித்து வரும் படம் சைரன்.
- இப்படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'சைரன்'. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரம் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது.

சைரன்
இந்நிலையில் 'சைரன்' படத்தில் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாகவும் ஜெயம் ரவி ஜெயிலர் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நிதி அகர்வால் ’கலகத் தலைவன்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
- இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடித்த கலகத் தலைவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

நிதி அகர்வால்
முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Sometimes you gotta be a beauty and a beast ? pic.twitter.com/CplVJHABbi
— Nidhhi Agerwal (@AgerwalNidhhi) March 16, 2023






