என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஜெயம் ரவி நடித்து வரும் படம் சைரன்.
    • இப்படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'சைரன்'. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரம் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது.

     

    சைரன்

    சைரன்


    இந்நிலையில் 'சைரன்' படத்தில் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாகவும் ஜெயம் ரவி ஜெயிலர் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிதி அகர்வால் ’கலகத் தலைவன்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
    • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    ஈஸ்வரன், பூமி படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால், தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நாயகனாக நடித்த கலகத் தலைவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.


    நிதி அகர்வால்

    முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

     

    லியோ திரைப்படம்

    லியோ திரைப்படம்

    இப்படத்தில் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 'லியோ' படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணைந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


    மதுசூதனன் ராவ் 

    மதுசூதனன் ராவ் 

    இந்நிலையில் இப்படத்தில் வில்லன் நடிகர் மதுசூதனன் ராவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு வருகிற மார்ச் 24ம் தேதி நிறைவுபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.


    லால் சலாம் படக்குழு

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    லால் சலாம்

    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் மூத்த காமெடி நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. படையப்பா படத்தில் ரஜினி மற்றும் செந்திலின் காமெடி காட்சி இன்று வரை ரசிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
    • இவர் நடிக்கும் 48-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.


    சிம்பு

    'எஸ்.டி.ஆர். 48' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    சிம்பு

    இந்த நிலையில் 'எஸ்.டி.ஆர். 48' படத்திற்காக சிம்புவிற்கு முக்கிய பயிற்சி ஒன்று கொடுக்கப்பட இருக்கிறது. தேசிங்கு பெரியசாமி கொடுத்த திரைக்கதைப்படி தற்காப்புக் கலை தெரிந்த நாயகனாக சிம்பு வருகிறார். இதற்காக அவருக்குச் சிறப்பு தற்காப்புக் கலையை கற்றுக் கொடுக்க தாய்லாந்தில் முகாமிட்டிருக்கிறார் என்கிறார்கள். இங்கு 15 நாட்கள் தங்கியிருந்தபடி தற்காப்புக் கலையைக் கற்றுத் திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • பஞ்சாப் திரை உலகில் பிரபல நடிகராக திகழ்பவர் அமன் தாலிவால்.
    • இவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது மர்ம மனிதன் தாக்கினான்.

    பஞ்சாப் திரை உலகில் பிரபல நடிகராக திகழ்பவர் அமன் தாலிவால். இவர் அமெரிக்கா சென்று இருந்தார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது மர்ம மனிதன் ஒருவன் கத்தியுடன் உடற்பயிற்சி கூடத்தில் புகுந்தான். அவன் அங்கிருந்தவர்களை மிரட்டினான். திடீரென அவன் நடிகர் அமன் தாலிவாலை சரமாரியாக கத்தியால் குத்தினான்.


    மர்ம மனிதனால் தாக்கப்பட்ட அமன் தாலிவால்

    இதில் அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் அமன் தாலிவால் மீது தாக்குதல் நடத்திய மர்மமனிதன் யார்? . எதற்காக இந்த கத்திக்குத்தில் ஈடுபட்டான் என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்பயிற்சி கூடத்தில் பஞ்சாப் நடிகர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
    • இவர் தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.


    வடிவேலு

    இதைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது நடிகர் வடிவேலு பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி -2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    வடிவேலு -பி.வாசு

    இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுக்கும் பி.வாசுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதனால் கோபமடைந்த இயக்குனர் பி.வாசு நடிக்க விருப்பம் இல்லாவிட்டால் சென்று விடலாம் என்று வடிவேலுவிடம் கூறியதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.

    • இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘கிரிமினல்’.
    • இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், 'கிரிமினல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • பி. வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி -2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    • நடிகை கங்கனா ரனாவத் 'சந்திரமுகி 2' படத்தில் தனது காட்சிகளை முடித்துள்ளார்.

    சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


    சந்திரமுகி -2

    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் 'சந்திரமுகி 2' படத்தில் தனது கதாபாத்திரத்தை முடித்துள்ளதாக நேற்று பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    அதில், "சந்திரமுகி படத்தில் இன்று நான் எனது கதாபாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. நான் ராகவா லாரன்ஸுடன் எப்போதும் புகைப்படம் எடுத்ததில்லை. ஏனென்றால் நாங்கள் எப்போதும் திரைப்பட உடையில் தான் இருப்போம். அதனால் இன்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே புகைப்படம் எடுக்க கோரினேன்.


    சந்திரமுகி -2

    லாரன்ஸ் மாஸ்டரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஏனெனில் அவர் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார், ஆனால் ஒரு நம்பமுடியாத உயிரோட்டமான, கனிவான மற்றும் அற்புதமான மனிதர். உங்களின் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்கான அனைத்து முன் பரிசுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருந்தார்.


    சந்திரமுகி -2

    இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி அவரை படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.


    • 'சீதா ராமம்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மிருணாள் தாகூர்.
    • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் மிருணாள் தாகூர் திரையுலகில் தனக்கான இடத்தை பெற்றார். மேலும், இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.


    இதுமட்டுமல்லாமல் மிருணாள் தாகூர் சூர்யாவின் 42-வது படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்றொரு தமிழ் படத்தில் இவரை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம். இந்நிலையில், தற்போது மிருணாள் தாகூர் தெலுங்கு படம் ஒன்றிற்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


    அதாவது, தெலுங்கில் நானிக்கு ஜோடியாக இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இந்த படத்திற்காக மிருணாள் தாகூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவுக்கு வந்து குறுகிய நாட்களிலேயே மிருணாள் தாகூர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பது சக நடிகைகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தங்கலான்

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் கதைக்களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் 3 வாரங்களில் முடிவடையவுள்ளதாகவும் அடுத்த 15 நாட்கள் ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், 'தங்கலான்' திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    ஆர்.ஆர்.ஆர்

    இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    ஆர்.ஆர்.ஆர்.படக்குழு

    இதுகுறித்து இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "ஆஸ்கார் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்களுக்குள் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்போம். அதற்கான பணிகளை வேகமாக தொடங்குவோம்'' என்றார்.

    இதனால் 'ஆர்ஆர்ஆர்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×