என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பாலிவுட்டில் தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டவர் அனன்யா பாண்டே.
    • இவர் சமீபத்தில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் 'லைகர்’ திரைப்படத்தில் நடித்தார்.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான சங்கி பாண்டேயின் மகள் அனன்யா பாண்டே கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2' படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றார். தொடர்ந்து இவர் 'பதி பத்னி அவுர் வா' போன்ற படங்களில் நடித்து தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டார்.


    அனன்யா பாண்டே

    சமீபத்தில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே தற்போது பல விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.


    தோழிகளுடன் புகைப்பிடிக்கும் அனன்யா பாண்டே

    அதாவது, அனன்யா பாண்டேயின் குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை அனன்யா பாண்டே தனது தோழிகளுடன் சேர்ந்து புகைப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அனன்யாவிற்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..? என்று விமர்சித்து வருகின்றனர்.

    • தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூல் செய்தது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    வாத்தி

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து 'வாத்தி' திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

    வாத்தி

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஓடிடி தளம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


    • அருள்நிதி தற்போது சை.கௌதமராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

    மேலும், இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • நானி நடிப்பில் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘தசரா’.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.


    தசரா போஸ்டர்

    இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. 'தசரா' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், 'தசரா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வெளியான ஒரே நாளில் ஐந்து மொழிகளில் 20 மில்லியன் பார்வையாளர்களையும் 460 ஆயிரம் லைக்குகளையும் கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் பாரதிராஜா தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
    • இவர் "கருமேகங்கள் கலைகின்றன" படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் "கருமேகங்கள் கலைகின்றன" படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    பாரதிராஜா

    இதனிடையே இயக்குனர் பாரதிராஜா மீண்டும் படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்கவுள்ளதாகவும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'தாய்மெய்' என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து 'மாவீரன்' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    மாவீரன்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் சமீபத்தில் வெளியானது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் 3மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.


    மாவீரன்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

    சந்திரமுகி 2

    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை படக்குழுவுடன் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடிய வீடியோவை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

    சந்திரமுகி 2

    இந்நிலையில், தற்போது நடிகை கங்கனா ரனாவத் 'சந்திரமுகி -2' படத்தில் தனது கதாபாத்திரத்தை இன்று முடிக்கவுள்ளதாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சந்திரமுகி படத்தில் இன்று நான் எனது கதாபாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. நான் ராகவா லாரன்ஸுடன் எப்போதும் புகைப்படம் எடுத்ததில்லை. ஏனென்றால் நாங்கள் எப்போதும் திரைப்பட உடையில் தான் இருப்போம். அதனால் இன்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே புகைப்படம் எடுக்க கோரினேன்.

    சந்திரமுகி 2

    லாரன்ஸ் மாஸ்டரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஏனெனில் அவர் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார், ஆனால் ஒரு நம்பமுடியாத உயிரோட்டமான, கனிவான மற்றும் அற்புதமான மனிதர். உங்களின் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்கான அனைத்து முன் பரிசுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    ஜவான்

    மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படம் வருகிற ஜுன் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    ஷாருக்கான் -சஞ்சய் தத்

    அதாவது, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் பிசியாக இருந்து வருவதால் ' ஜவான்' படத்தில் நடிக்க போதுமான கால்ஷீட் கொடுக்கமுடியாமல் போய்விட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு முடிவடைய சிறிது நாட்கள் எடுக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

     

    இந்தியன் 2

    இந்தியன் 2


    இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சியின் ஒரு பகுதி படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தென் ஆப்ரிக்கா மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பு 14 நாட்கள் நடைபெறும் என்றும் இந்த சண்டை காட்சி ரயிலில் நடப்பது போன்று படமாக்கப்படுவதாகவும், இது உலக தரம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பகாசூரன்’.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன் வெற்றி விழா

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.


    இதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'காத்திரு' பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. புகழேந்தி வரிகளில் லக்ஷ்மிகாந்த் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.




    • இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம்.
    • இப்படத்திற்காக சமந்தா கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்துள்ளார்.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

     

    சாகுந்தலம்

    சாகுந்தலம்


    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் திரைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா படம் தொடர்பாக பகிர்ந்திருந்தார். அதில், "கடைசியாக இன்று சாகுந்தலம் திரைப்படத்தை பார்தேன். குணசேகர் சார் நீங்கள் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். என்ன ஒரு அழகான படம். மிகப்பெரிய காவியத்தை அன்புடன் உயிர்பித்துள்ளீர்கள். இந்த படத்தினை ரசிகர்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடுவதை காண ஆர்வமாக உள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார்.


    கோவிலில் படக்குழுவுடன் சமந்தா
    கோவிலில் படக்குழுவுடன் சமந்தா

    இந்நிலையில் நடிகை சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு படம் வெற்றி பெறுவதற்காக சமந்தா சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×