புகைப்பிடித்து மாட்டிக்கொண்ட அனன்யா பாண்டே.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்..

பாலிவுட்டில் தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டவர் அனன்யா பாண்டே.இவர் சமீபத்தில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் 'லைகர்’ திரைப்படத்தில் நடித்தார்.
அனன்யா பாண்டே
அனன்யா பாண்டே
Published on

பாலிவுட்டின் பிரபல நடிகரான சங்கி பாண்டேயின் மகள் அனன்யா பாண்டே கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2' படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றார். தொடர்ந்து இவர் 'பதி பத்னி அவுர் வா' போன்ற படங்களில் நடித்து தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டார்.

அனன்யா பாண்டே

சமீபத்தில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே தற்போது பல விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

தோழிகளுடன் புகைப்பிடிக்கும் அனன்யா பாண்டே

அதாவது, அனன்யா பாண்டேயின் குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை அனன்யா பாண்டே தனது தோழிகளுடன் சேர்ந்து புகைப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அனன்யாவிற்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..? என்று விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com