என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.


    இதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'காத்திரு' பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. புகழேந்தி வரிகளில் லக்ஷ்மிகாந்த் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.




    • இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம்.
    • இப்படத்திற்காக சமந்தா கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்துள்ளார்.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

     

    சாகுந்தலம்

    சாகுந்தலம்


    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் திரைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா படம் தொடர்பாக பகிர்ந்திருந்தார். அதில், "கடைசியாக இன்று சாகுந்தலம் திரைப்படத்தை பார்தேன். குணசேகர் சார் நீங்கள் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். என்ன ஒரு அழகான படம். மிகப்பெரிய காவியத்தை அன்புடன் உயிர்பித்துள்ளீர்கள். இந்த படத்தினை ரசிகர்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடுவதை காண ஆர்வமாக உள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார்.


    கோவிலில் படக்குழுவுடன் சமந்தா
    கோவிலில் படக்குழுவுடன் சமந்தா

    இந்நிலையில் நடிகை சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு படம் வெற்றி பெறுவதற்காக சமந்தா சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
    • இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     

    துருவ நட்சத்திரம்

    துருவ நட்சத்திரம்


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.


    துருவ நட்சத்திரம்

    துருவ நட்சத்திரம்

    இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'.
    • விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    தங்கலான்

    தங்கலான்


    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

     

    தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித்

    தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித்


    இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

    • 95-வது ஆஸ்கர் விருதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாக தேர்வானது.
    • இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை பெற்றது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம். இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது.

    • சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.




    இந்நிலையில், பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 18ம் தேதி மாலை 5மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
    • தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

     

    பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் 

    பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் 

    இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ருத்ரன்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், 'ருத்ரன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பகைமுடி' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கருணாகரன் வரிகளில் திவாகர் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம்.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.


    சாகுந்தலம் படக்குழுவினருடன் சமந்தா

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சாகுந்தலம் திரைப்படத்தை நடிகை சமந்தா இன்று படக்குழுவினருடன் பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "கடைசியாக இன்று சாகுந்தலம் திரைப்படத்தை பார்தேன். குணசேகர் சார் நீங்கள் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். என்ன ஒரு அழகான படம். மிகப்பெரிய காவியத்தை அன்புடன் உயிர்பித்துள்ளீர்கள். இந்த படத்தினை ரசிகர்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடுவதை காண ஆர்வமாக உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்தவர் பொன்னம்பலம்.
    • இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார். அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.


    பொன்னம்பலம்

    இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல், சிரஞ்சீவி என பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். இதைத்தொடர்ந்து பொன்னம்பலத்தின் சொந்த அக்கா மகனே தன் கிட்னியை கொடுத்து அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவினார். தற்போது இவர் உடல் நலம் தேறி வருகிறார்.பொன்னம்பலத்தின் சிறுநீரக பிரச்சினைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என பல்வேறு வதந்திகள் கிளம்பியது.


    பொன்னம்பலம்

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, " குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாக பலர் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. என் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் பணிபுரிந்தார். நான் அவரை மிகவும் நம்பினேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அவனால் நன்றாக வாழ முடியவில்லை என்ற பொறாமையால் இதை அவர் செய்தார்" என்று கூறினார்.

    • சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • தற்போது இவர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    செல்வராகவன்

    இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது செல்வராகவன் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராவன் நடிக்கிறார்.


    செல்வராகவன்

    அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் மனதில் தோன்றும் விஷயங்களை பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு ! அது உங்களைத்தான் அதிகம் காயப்படுத்தும். மனதிற்கும் சேதம் விளைவிக்கும். வாழ்க்கையில் பார்க்க எவ்வளவோ இருக்கின்றது. வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள் !" என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தசரா'.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.


    தசரா

    இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'தசரா' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 4.59 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    ×