என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    கண்ணை நம்பாதே

    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.


    கண்ணை நம்பாதே போஸ்டர்

    இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'கண்ணை நம்பாதே' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'கதிரு' பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.



    • கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன்.
    • இவர் தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

    2019ம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து பெற்ற படம் கோமாளி. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்தது. இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இவானா, யோகி பாபு, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் வசூலை குவித்து 100 நாட்களை கடந்தது.


    பிரதீப் ரங்கநாதன்

    பிரதீப் ரங்கநாதன்

    இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் 100வது நாள் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் `இராவண கோட்டம்'.
    • இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    'மதயானை கூட்டம்' படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.


    இராவண கோட்டம்

    `இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'அத்தனபேர் மத்தியில' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ‘லியோ’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

    2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல இந்திய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.


    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லோகேஷ் தனது சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'எல்லாவற்றிற்கும் மிகவும் நன்றி விஜய் அண்ணா' என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.


    • 95-வது ஆஸ்கர் விருதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாக தேர்வானது.
    • இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை பெற்றது. இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்

    அந்த வகையில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆவணப்படத்தில் நடித்த மூதாட்டி பெள்ளிக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில், நீங்கள் நடித்த ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். உங்களால் தமிழ்நாட்டிற்கே பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு பெள்ளியும் நன்றி தெரிவித்து கொண்டார். முன்னதாக கூடலூர் எம்.எல்.ஏ. ஜெயசீலன் நேரில் சென்று பெள்ளிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    கஸ்டடி

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கஸ்டடி' படத்தின் டீசர் வருகிற 16-ஆம் தேதி மாலை 4.51 மணிக்கு வெளியாகும் என வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • 95-வது ஆஸ்கர் விருதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாக தேர்வானது.
    • சமூக வலைத்தளத்தில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் மனம் திறந்துள்ளார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது. இந்த படக்குழுவுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.


    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். ஆஸ்கர் விருது வென்ற இந்த ஆவணப்படத்தை பொம்மன், பெள்ளி தம்பதிக்கு திரையிட்டு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை நிருபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் முன்வைத்திருந்தார்.


    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழு

    இந்நிலையில் இது தொடர்பாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் சமூக வலைத்தளத்தில் மனம் திறந்து பதிவிட்டுள்ளார். அதில், இது சம்மந்தமாக நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியே இந்த ஆவணப்படத்தை என்னால் திரையிடப்பட்டு காட்டப்பட்ட முதல் நபர். அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதியில் ஸ்டிரீமிங் சேனல்களை பார்க்கும் வசதி இல்லை என்று பதிவிட்டுள்ளார். 

    • அமெரிக்காவில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தீபிகா கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.
    • உலகப்புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனே உடையையும் அவரது ஸ்டைலையும் புகைப்படங்களாக எடுத்தனர்.

    அமெரிக்காவில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தீபிகா கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. அவர் இந்த விழாவில் பலரது கண்களைக் கவரும் வகையில் வித்தியாசமான உடை அலங்காரத்தில் வந்து கலந்து கொண்டார். அவர்தான் எந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கப்போகிறது என்பதை அறிவிப்பும் செய்தார்.

     

    தீபிகா படுகோனே

    தீபிகா படுகோனே


    இந்த நிலையில் பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனே உடையையும் அவரது ஸ்டைலையும் புகைப்படங்களாக எடுத்தனர். இதை மறுநாள் வெளியிட்ட புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனேவை மறந்து அவரை பிரேசிலிய அழகி கமிலா ஆசல்வ்ஸ் என்று குறிப்பிட்டனர். இதைப்பார்த்துப் பிரபலமான வோக் பத்திரிகையும் தீபிகாவின் பெயரை மாற்றி வெளியிட்டது. இது மறுநாள் ஆஸ்கர் கொண்டாட்டங்களில் எதிரொலித்தது என்கிறார்கள்.

    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கரை வென்றது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது.

     

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது.


    குனீத் மோங்கா - கார்த்திகி கோன்சால்வ்ஸ்

    குனீத் மோங்கா - கார்த்திகி கோன்சால்வ்ஸ்

    இந்நிலையில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குனீத் மோங்கா, கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் விருதை வென்ற மனதை வருடசெய்யும், அற்புதமான தி எலிஃபேண்ட் விஸ்பரரஸ் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி பிரபலடமைந்தவர் லோகேஷ் கனகராஜ்.
    • இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

    2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல இந்திய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

     

    சஞ்சய் தத் - லோகேஷ் கனகராஜ்

    சஞ்சய் தத் - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சஞ்சய் தத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய உடன் பிறப்பு, மகன், குடும்பம் லோகேஷ் கனகராஜ். கடவுள் உங்களுக்கு வெற்றி, அமைதி, சந்தோஷம் மற்றும் உடல் ஆரோகியத்தை கொடுப்பார். நான் எப்பொழுதும் உன் வாழ்க்கையில் இருப்பேன். லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

    • சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

     

    சிம்பு

    சிம்பு


    இந்நிலையில், பத்து தல படத்தின் இரண்டாம் பாடலான நினைவிருக்கா? என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். இதனை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • இதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கரை வென்றது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது.

     

    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது.


    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்

    இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தியா சார்பில் ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "வாழ்த்துக்கள் கீரவாணி மற்றும் சந்திர போஸ் ஏற்கனவே கணிக்கப்பட்ட மற்றும் தகுதியானது. உங்கள் இருவருக்கும் மற்றும் ஆர்.ஆர்.ஆர் குழுவிற்கும் ஜெய்ஹோ!! என்று பதிவிட்டுள்ளார்.


    இந்திய சார்பில் ஆஸ்கர் வென்றவர்கள்
    இந்திய சார்பில் ஆஸ்கர் வென்றவர்கள்

    மேலும் மற்றொரு பதிவில், வாழ்த்துக்கள், இந்திய இயக்குனர்களுக்கு நீங்கள் ஒரு மடையை திறந்து ஊக்கப்படுத்தியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதை (சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல்) வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×