என் மலர்
சினிமா செய்திகள்

சிம்பு
ஆஸ்கர் வென்ற தி எலிஃபேண்ட் விஸ்பரரஸ் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு
- 95-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
- இதில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கரை வென்றது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வெற்றியாளர்கள் தேர்வு இதற்கு முன்பே நடைபெற்ற நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது.
தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்
இதில் இந்திய சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் (THE ELEPHANT WHISPERERS) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலாக - நாட்டு நாட்டு - கீரவாணி, சந்திர போஸ் (ஆர்.ஆர்.ஆர்) ஆஸ்கர் விருதை வென்றது.
குனீத் மோங்கா - கார்த்திகி கோன்சால்வ்ஸ்
இந்நிலையில் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குனீத் மோங்கா, கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் விருதை வென்ற மனதை வருடசெய்யும், அற்புதமான தி எலிஃபேண்ட் விஸ்பரரஸ் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
congrats @guneetm, @EarthSpectrum and the entire team for winning Best Documentary Short Film for the very heartwarming and lovely #TheElephantWhisperers. #Oscars #Oscars95
— Silambarasan TR (@SilambarasanTR_) March 14, 2023






