என் மலர்
நீங்கள் தேடியது "aman dhaliwal"
- பஞ்சாப் திரை உலகில் பிரபல நடிகராக திகழ்பவர் அமன் தாலிவால்.
- இவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது மர்ம மனிதன் தாக்கினான்.
பஞ்சாப் திரை உலகில் பிரபல நடிகராக திகழ்பவர் அமன் தாலிவால். இவர் அமெரிக்கா சென்று இருந்தார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது மர்ம மனிதன் ஒருவன் கத்தியுடன் உடற்பயிற்சி கூடத்தில் புகுந்தான். அவன் அங்கிருந்தவர்களை மிரட்டினான். திடீரென அவன் நடிகர் அமன் தாலிவாலை சரமாரியாக கத்தியால் குத்தினான்.

மர்ம மனிதனால் தாக்கப்பட்ட அமன் தாலிவால்
இதில் அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் அமன் தாலிவால் மீது தாக்குதல் நடத்திய மர்மமனிதன் யார்? . எதற்காக இந்த கத்திக்குத்தில் ஈடுபட்டான் என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்பயிற்சி கூடத்தில் பஞ்சாப் நடிகர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






