search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நண்பா.. இவன்தான் பிக்கிலி - ரசிகர்களை பயமுறுத்திய விஜய் ஆண்டனி
    X

    விஜய் ஆண்டனி

    நண்பா.. இவன்தான் பிக்கிலி - ரசிகர்களை பயமுறுத்திய விஜய் ஆண்டனி

    • நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வரும் திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார்.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    பிச்சைக்காரன் 2 - விஜய் ஆண்டனி

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது. 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விஜய் ஆண்டனி பகிர்ந்த போஸ்டர்

    இந்நிலையில் 'பிச்சைக்காரன் -2' படத்தில் இடம்பெற்றுள்ள பிக்கிலி கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு போஸ்டர் வெளியிட்டு விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தியுள்ளார். அதில், நண்பா.. இவன்தான் பிக்கிலி. கொஞ்சம் கவலப்படுங்க, முடிஞ்சா பயப்புடுங்க. இவனப்பத்தி, நாளைக்கி மாலை (evening) 4 மணிக்கி, பிக்கிலி பாடல்-ல இன்னும் நிறைய சொல்றேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். மேலும் பிக்கிலி போஸ்டர் தங்களை பயமுறுத்துவதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×