மீண்டும் வெளியாகும் மோகன் ஜி-யின் பகாசூரன் திரைப்படம்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பகாசூரன்'.இப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மீண்டும் வெளியாகும் மோகன் ஜி-யின் பகாசூரன் திரைப்படம்
Published on

பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். பகாசூரன் வெற்றி விழா இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

'பகாசூரன்' திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் பகாசூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 28ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com