என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய்யின் பத்ரி, கமலின் தெனாலி, ரஜினிகாந்த்தின் படையப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் லாவண்யா தேவி.
- இவர் தொழிலதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் படத்தில் சொப்னா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா தேவி. அதன்பின்னர் விஜய்யின் பத்ரி, கமலின் தெனாலி, ரஜினிகாந்த்தின் படையப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் லாவண்யா, தற்போது அருவி சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 44 வயதாகும் லாவண்யா தேவி, தொழிலதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இவரின் திருமணம் திருப்பதியில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் லாவண்யாவுடன் பணியாற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த கோவை குணா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
- இவரின் மறைவுக்கு மதுரை முத்து உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் கோவை குணா (வயது 60). பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து உயிரிழந்தார். இவரின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. கோவை குணாவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கோவை குணா
இந்நிலையில் கோவை குணா உடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்காற்றிய மதுரை முத்து இரங்கல் தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "20 ஆண்டுகளில் எத்தனையோ கலைஞர்களை பார்த்து விட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன். இன்னும் எத்தனை பல குரல் கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது. இவரும் நானும் கலக்கப்போவது யாரு பாகம் ஒன்றில் வெற்றியாளராக வந்தாலும். எல்லா கலைஞர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இளநீரைப் போன்று தூய்மையான அன்பிற்கு உகந்த மனிதர். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
கோவை குணா கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
- இப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

வெந்து தணிந்தது காடு
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.

வெந்து தணிந்தது காடு
இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மல்லிப்பூ' பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- இயக்குனர் சுதா கொங்கரா ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சூரரைப்போற்று இந்தி ரீமேக் போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. டைட்டில் வெளியாகும் முன்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
We are ready for take off! ✈️
— Akshay Kumar (@akshaykumar) March 21, 2023
Production No. 27 (Untitled) releases in theatres worldwide on 1st September, 2023. #RadhikaMadan@SirPareshRawal@Sudha_Kongara #Jyotika@Suriya_offl @vikramix @rajsekarpandian @Abundantia_Ent@2D_ENTPVTLTD@CaptGopinath@sikhyaent@gvprakash pic.twitter.com/OW9NjKkmAy
- இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இது கதையல்ல நிஜம்'.
- இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'இது கதையல்ல நிஜம்'. இதில், 'கால் டாக்ஸி' படத்தில் நடித்த சந்தோஷ் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக 'அறம்', 'சங்கத்தலைவன்' போன்ற படங்களில் நடித்த சுனு லட்சுமி இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், சென்றாயன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இது கதையல்ல நிஜம் முதல் தோற்ற போஸ்டர்
ஏசியாசின் மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்கிறார். எம்.ஏ. ராஜதுரை ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
'இது கதையல்ல நிஜம்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'.
- இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிம்பு
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து 'பத்து தல' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'பத்து தல' படம் குறித்தும் அவர் அடுத்து தயாரித்து வரும் படங்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஞானவேல் ராஜா
அதில், ரொம்ப பெரிய மனசு இருக்கும் நடிகர் சிம்பு. வெளியில் தான் எங்களை வைத்து சர்ச்சை கருத்துகளை பரப்பினார்கள். எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. நான் 18 வருடங்களாக சிம்புவிடம் எப்படி பழகி கொண்டு இருந்தேனோ அதே உறவு தான் எப்போதும் இருக்கிறது. என்னைக்கும் அது மாறவில்லை. தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்ததால் இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் தான் தயாரிப்பாளர் கவுன்சில் இந்த மாதிரியான விஷயங்களில் தற்போது ஈடுபடுவதில்லை" என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
- சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் கோவை குணா.
- இவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் கோவை குணா (60). பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கோவை குணா
இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து இவர் உயிரிழந்தார். இவரது உடல் கோவை, விலாங்கு குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. மேலும், நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை நிறைவு செய்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளதாக படக்குழு அறிவித்தனர். இந்நிலையில், 'லியோ' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விஜய் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- கௌதம் கார்த்திக் தற்போது நடித்துள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
- இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் ரமணா, கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார்.

1947- ஆகஸ்ட் 16
இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.

1947- ஆகஸ்ட் 16
அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- 'சாமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கோட்டா சீனிவாச ராவ்.
- இவர் தமிழில் பல படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். இதைத்தொடர்ந்து இவர் நடிகர் விக்ரம் நடித்த 'சாமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

கோட்டா சீனிவாச ராவ்
இந்த படத்தில் விக்ரமை விட வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் தமிழில் 'திருப்பாச்சி', 'கோ', 'சகுனி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இன்று காலை இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தான் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
- ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பதான்’.
- இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'பதான்'. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

பதான்
பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'பதான்' திரைப்படம் இந்தியாவில் ரூ.629 கோடியும் வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

பதான் போஸ்டர்
இந்நிலையில், 'பதான்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (மார்ச் 22) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
we sense a turbulence in the weather, after all Pathaan is coming!#PathaanOnPrime, Mar 22 in Hindi, Tamil and Telugu @iamsrk @deepikapadukone @TheJohnAbraham #SiddharthAnand @yrf pic.twitter.com/MnytnUqZEj
— prime video IN (@PrimeVideoIN) March 20, 2023
- வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயம்.
- லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அவரது வீட்டில் பணியாற்றி வந்த பெண் பணியாளர் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் பரிவர்த்தனை நடத்தப்பட்டிருப்பதால் அது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் பெண் பணியாளர் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரை விசாரித்தனர். இந்த விசாரணையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியிருப்பதும் வாங்கிய கடனை இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தியிருப்பதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.பெண் பணியாளர் ஈஸ்வரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈஸ்வரி நகை விற்றது எங்கே..? நிலம் வாங்கியது எப்படி..? போன்ற பல விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது.






