'சாமி' பட வில்லன் இறந்து விட்டாரா..? விளக்கமளித்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ்

'சாமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கோட்டா சீனிவாச ராவ்.இவர் தமிழில் பல படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.
கோட்டா சீனிவாச ராவ்
கோட்டா சீனிவாச ராவ்
Published on: 

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். இதைத்தொடர்ந்து இவர் நடிகர் விக்ரம் நடித்த 'சாமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

கோட்டா சீனிவாச ராவ்

இந்த படத்தில் விக்ரமை விட வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் தமிழில் 'திருப்பாச்சி', 'கோ', 'சகுனி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இன்று காலை இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தான் நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com