சின்னத்திரை நடிகர் கோவை குணா காலமானார்

சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் கோவை குணா.இவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
கோவை குணா
கோவை குணா
Published on

சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் கோவை குணா (60). பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கோவை குணா

இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து இவர் உயிரிழந்தார். இவரது உடல் கோவை, விலாங்கு குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. மேலும், நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com